India vs Pakistan: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!
BCCI Vice President Rajiv Shukla: 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகிறது. இதில், பாகிஸ்தான் அணிகள் தங்களது அனைத்து போட்டிகளையும் ஹைபிரிட் மாடலில் இலங்கையில் விளையாடவுள்ளது. அதன்படி, இந்தியா - இலங்கை இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற 2025 பிப்ரவரி 15ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்தியா Vs பாகிஸ்தான்
2008ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை. அதேநேரத்தில், கடந்த 2012-13ம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதிலிருந்து இரு அணிகளுக்கும் இடையே இருதரப்பு தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமா, இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளும் ஐசிசி, ஏசிசி நடத்தும் முக்கிய போட்டிகளில் மட்டுமே நேருக்குநேர் சந்தித்து விளையாடி வருகின்றன. இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் வருகின்ற 2025 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில், வங்கதேச அணிகளின் போட்டி இடத்தை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை பாகிஸ்தான் ஆதரித்தது.
ALSO READ: சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகள்.. சிறப்பு சாதனையை படைத்த இந்திய அணி!
மோசமான அரசியல் சூழல்:
BCCI vice-president Rajiv Shukla said today that playing a bilateral series between India and Pakistan is difficult given the current circumstances between the two countries… pic.twitter.com/sLqSMTbQVs
— Galgotias Times (@galgotiastimes) January 24, 2026
கிரிக்கெட் மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகளும் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளன. இவை அனைத்திற்கும் மத்தியில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு தொடர் நடத்துவது சாத்தியமா, இரு அணிகளும் மீண்டும் ஒருவருக்கொருவர் சுற்றுப்பயணம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெளிவான பதிலை அளித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர் மீண்டும் நடக்குமா?
இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து செய்தி நிறுவனமான ANI-யிடம் பேசிய BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ”இந்த சூழ்நிலையில், அரசாங்கம் வழங்கும் எந்த உத்தரவுகளையும் பின்பற்றுவதே எங்கள் கொள்கை. அரசாங்கம் எந்த நாட்டைப் பற்றியும் ஏதாவது சொன்னால், கிரிக்கெட் வாரியம் அதைப் பின்பற்றும் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், இந்த விஷயத்திலும் அரசாங்கத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படும். இந்த நேரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு சுற்றுப்பயணங்கள் சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் நடுநிலையான இடங்களில் நடத்தப்படவும் வாய்ப்புகள் குறைவு என்றும் ராஜீவ் சுக்லா பேசினார். கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் பஹல்காமில் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து, கடந்த 2025 மே 7ம் தேதி இந்திய இராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இது ஆபரேஷன் சிந்தூர் என்று அழைக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் மேலும், அதிகரித்துள்ளன.
ALSO READ: அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி.. உள்ளே வந்த ஸ்காட்லாந்து.. வங்கதேசத்திற்கு ஏமாற்றம்!
இலங்கையில் பாகிஸ்தான் போட்டிகள்:
2026 டி20 உலகக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகிறது. இதில், பாகிஸ்தான் அணிகள் தங்களது அனைத்து போட்டிகளையும் ஹைபிரிட் மாடலில் இலங்கையில் விளையாடவுள்ளது. அதன்படி, இந்தியா – இலங்கை இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற 2025 பிப்ரவரி 15ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.