BCCI: பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்த சன் குழுமம்.. பிசிசிஐ தரப்பில் விளக்கம்!

Sunrisers Leeds: 27 வயதான பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது 'தி ஹண்ட்ரட்' ஏலத்தின் போது 190,000 டாலர் (தோராயமாக ரூ.2.34 கோடி)-க்கு சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முதன்மையாக இந்திய ஆயுதப்படைகள் குறித்து அப்ரார் அகமது செய்த செயல்கள்தான்.

BCCI: பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்த சன் குழுமம்.. பிசிசிஐ தரப்பில் விளக்கம்!

பிசிசிஐ

Published: 

13 Mar 2026 16:43 PM

 IST

தி ஹண்ட்ரட் (The Hundred) கிரிக்கெட் லீக்கில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள சன் குழுமத்தின் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி நேற்று அதாவது 2026 மார்ச் 12ம் தேதி நடந்த ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ஏலம் எடுத்தது. இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சன் குழுமம் மற்றும் காவ்யா மாறனை (Kavya Maran) சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த விமர்சனங்களை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது முதல் அதிகார்ப்பூர்வ பதிலை தெரிவித்துள்ளது. காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் லீட்ஸ் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் இந்திய மதிப்பில் ரூ. 2.34 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: சிக்கலில் ஐபிஎல் 2026ன் முதல் போட்டி.. RCB – SRH போட்டி மாற்றமா?

பிசிசிஐ விளக்கம்:


27 வயதான பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது ‘தி ஹண்ட்ரட்’ ஏலத்தின் போது 190,000 டாலர் (தோராயமாக ரூ.2.34 கோடி)-க்கு சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முதன்மையாக இந்திய ஆயுதப்படைகள் குறித்து அப்ரார் அகமது செய்த செயல்கள்தான். இருப்பினும், இந்த விஷயத்தில் தலையிடப்போவதில்லை என்று பிசிசிஐ தெளிவுப்படுத்தியுள்ளது. 2026 மார்ச் 13ம் தேதியான இன்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “வெளிநாட்டு லீக்குகளில் உரிமையாளர்கள் எடுக்கும் முடிவுகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. இது எங்கள் களத்தில் (ஐபிஎல்) இல்லை. அவர்கள் இத்தகைய முடிவை வெளிநாட்டு லீக்கில் செய்துள்ளனர். இந்த விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. பிசிசிஐயின் அதிகாரம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் உள்நாட்டு நலன்களுக்கு மட்டுமே. தேர்வு மற்றும் அதன் விளைவுகளுக்கான பொறுப்பு உரிமையாளர் நிர்வாகத்திடம் மட்டுமே உள்ளது.” என்றார்.

ALSO READ: பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்.. எழுதப்படாத விதியை மாற்றிய காவ்யா மாறன்.. கிளம்பும் எதிர்ப்புகள்..!

சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி விளக்கம்:

தற்போது, ​​சன்ரைசர்ஸ் லீட்ஸ் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, தனது அணி பாகிஸ்தான் வீரரை ஏன் வாங்கியது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “எங்கள் முன்னுரிமை அடில் ரஷீத்தை வாங்குவதாக இருந்தது, ஆனால் அது நடக்கவில்லை. இதன் காரணமாக, வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கான விருப்பங்களை நாங்கள் தேடினோம். நாங்கள் 4-5 வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தோம், அவர்களில் அப்ரார் ஒருவர். அவர் அணியில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.” என்றார்.

Follow Us
இந்தியாவில் முதல் நீதிமன்ற உத்தரவு: பாசிவ் யூத்தனேஷியாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்
டாரி காட் ரயில் நிலையத்தின் வியப்பான வரலாறு.. என்ன தெரியுமா?
ரயில் பெட்டியை டான்ஸ் ஃபுளோராக மாற்றிய குடும்பம் - வைரலாகும் சர்ச்சை வீடியோ
கோடைகாலத்தில் மண்பானை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் - மருத்துவர்கள் ஆச்சரிய தகவல்