T20 World Cup 2026: கோரிக்கை நிராகரிப்பு! 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசம்..!

Bangladesh Boycotts 2026 T20 World Cup: 2026 டி20 உலகக் கோப்பையைப் புறக்கணிக்க வங்கதேச அணி முடிவு செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகளை மாற்ற வேண்டும் என்ற பிசிபியின் கோரிக்கையை ஐசிசி (ICC) நிராகரித்துள்ளதாகவும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. 

T20 World Cup 2026: கோரிக்கை நிராகரிப்பு! 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசம்..!

வங்கதேச கிரிக்கெட் அணி

Published: 

22 Jan 2026 17:35 PM

 IST

2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடாது என்பதை வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையைப் புறக்கணிக்க வங்கதேச அணி முடிவு செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகளை மாற்ற வேண்டும் என்ற பிசிபியின் கோரிக்கையை ஐசிசி (ICC) நிராகரித்துள்ளதாகவும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில், வங்கதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், “நாங்கள் அனைவரும் உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறோம். இந்தியாவில் எங்கள் வீரர்கள் மற்றும் அணிக்கான பாதுகாப்பு பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. இது அனைத்தும் ஒரு வீரரை அவர்களின் அணியிலிருந்து நீக்குவதில் இருந்து தொடங்கியது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்று ஐசிசி எவ்வளவு சொன்னாலும், எங்கள் வீரர் அவர்களின் லீக் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியா 2026 உலகக் கோப்பையை நடத்துகிறது. அதன் பிறகு என்ன மாறிவிட்டது? முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால், ஐசிசி பாதுகாப்பை வழங்கும் என்று எப்படி நம்புவது? நான் வீரர்களுடன் பேசியது எல்லாம் ஒரு தனிப்பட்ட உரையாடல். அவர்கள் எங்களிடம் சொன்ன எதையும் நான் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். அவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்வதே சந்திப்பின் நோக்கமாகும். எனது வீரர்களை ஆபத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை. இது எங்கள் அரசாங்கத்தின் முடிவு. எங்கள் வீரர்களை நாங்கள் ஆபத்தில் ஆழ்த்த முடியாது.” என்று தெரிவித்தார்.

ALSO READ: அக்சர் படேலின் விரல் காயம்.. பதற்றத்தில் பிசிசிஐ.. டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் மாற்றமா?

இது ஐசிசியின் தோல்வி..

ALSO READ: பிசிசிஐ எந்த வீரருக்கும் ரூ.7 கோடி சம்பளம் வழங்காதா? விராட்-ரோஹித்துக்கு குறையும் சம்பளம்!

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்பூல் கூறுகையில், “இந்தியாவிலிருந்து எங்கள் போட்டிகளை மாற்றுவதற்கான எங்கள் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. உலக கிரிக்கெட்டின் நிலை குறித்து எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது. ஐசிசி எங்களின் 20 கோடி மக்களை முடக்கி வைத்துள்ளனர். கிரிக்கெட் ஒலிம்பிக்கிற்குச் செல்லவிருக்கிறது, ஆனால் எங்களைப் போன்ற ஒரு நாடு அங்கு செல்லவில்லை என்றால், அது ஐசிசியின் தோல்வியே ஆகும்.” என்று தெரிவித்தார்.

குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்.. மும்பை - அகமதாபாத் இடையே வரும் மாற்றம்..
கிரீன்லாந்தில் நிலவும் பதற்றம்.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!!
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் வீடியோ.. என்ன தெரியுமா?