IPL 2025 : டெல்லி அணியில் மீண்டும் இணையும் முஸ்தஃபிஸூர்? வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவு என்ன?
Mustafizur Joins DC : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முஸ்தாஃபிஸூர் ரஹ்மான் மீதமுள்ள ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில் பங்கேற்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர் மே 18 முதல் 24, 2025 வரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடவிருக்கிறார். அவரது வருகை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

முஸ்தாஃபிஸூர் ரஹ்மான்
இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டருந்த ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகள் தற்போது மீண்டும் மே 17, 2025 அன்று மீண்டும் துவங்க விருக்கிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டு பிளேயர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்றனர். இந்த நிலையில் மீண்டும் துவங்கவிருக்கிறத நிலையில் அவர்கள் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மிட்செல் ஸ்டார்க், ஜேக் பிரேசர்-மெக்கர்க், ஜோஃப்ரா ஆர்ச்சர், மயங்க் ஆதவ், டுஃபெளிஸிஸ் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அதே போல டெல்லி கேப்பிடல்ஸ் சார்பாக விளையாடிய முஸ்தஃபிஸூர் ரஹ்மான் மீண்டும் அணிக்கு திரும்புவாரா என்ற சந்தேகம் இருந்தது. காரணம் அவர் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் சார்பாக கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவரை ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்த நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவரை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அனுமதித்திருக்கிறது. ஷார்ஜாவில் நடைபெறும் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற பிறகு அவர் மீண்டும் இந்தியாவில் மே 18 முதல் மே 24, 2025 அன்று நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் சார்பாக பங்கேற்கவிருக்கிறார்.
டெல்லி கேப்பிடல்ஸ்க்கு கிடைத்த ஆறுதல்
தற்போது 5வது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ், பிளேஆஃப்ஸ் வாய்ப்புகளுக்காக போராடி வருகிறது. அடுத்ததாக மே 18, 2025 ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெறும் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டிக்காக முஸ்தாஃபிஸூரின் இணைவது அந்த அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவரை நேரடியாக பிளேயிங் லைன்அப்பில் சேர்க்கும் வாய்ப்பு குறித்த உறுதியான தகவல் எதுவும் இல்லை என்றாலும், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜேக் பிரேசர்-மக்கர்க் இந்தியா திரும்ப மாட்டார் என அறிவிக்கப்பட்டதால், டெல்லி அணியில் வெகுசன வீரர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். அவருக்கு பதிலாகவே முஸ்தாஃபிஸூர் டிராப்ட் செய்யப்பட்டார். மேலும், மிட்செல் ஸ்டார்க் திரும்பும் சாத்தியம் குறைவாகவே உள்ளது.
முந்தைய ஐபிஎல் சாதனைகள்
முஸ்தாஃபிஸூர் டெல்லி கேபிடல்ஸுக்காக ஏற்கனவே 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் விளையாடியுள்ளார். கடந்த 2022-இல் 8 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். அதே நேரத்தில், 2023-இல் வெறும் 2 போட்டிகளே ஆடினார். மொத்தம் 57 ஐபிஎல் போட்டிகளில், 61 விக்கெட்டுகள் பெற்றிருக்கிறார். முஸ்தாஃபிஸூர் ரஹமான் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது டெல்லி கேபிடல்ஸுக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேர இனி அனைத்து போட்டிகளில் வென்றாக வேண்டும்.