India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் அதிர்ச்சி.. முழுமையாக விற்காத டிக்கெட்.. அதிருப்தியில் ரசிகர்களா?
Asia Cup 2025: 2025 ஆசியக் கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. உயர்ந்த டிக்கெட் விலைகள் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. VIP சீட்டுகளின் விலை ரூ.2.5 லட்சம் வரை செல்கிறது. சாதாரண ரசிகர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளிப்பாடுகள் அதிகரித்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான 2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) போட்டி எப்போது நடைபெறும் என இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மற்றும் பதட்டங்கள் காரணமாக, ஐசிசி (ICC) மற்றும் ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் என இரு அணிகளும் கிரிக்கெட்டில் மோதுவதற்காக ஸ்டேடியத்தில் இறங்கும் போதெல்லாம், பார்வையாளர்கள் அரங்கம் எப்போதும் நிரம்பி வழியும். ஆனால் இந்த முறை அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி ஆசிய கோப்பை 2025 இல் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்னும் முழுமையாக விற்கப்படவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ALSO READ: 27 பந்துகளில் இலக்கை எட்டிய இந்திய அணி.. யுஏஇ அணியை துவம்சம் செய்த SKY படை!
ஏன் டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை?
🚨 INDIA Vs PAKISTAN TICKETS STILL NOT SOLD OUT 🚨
– The tickets of India Vs Pakistan Match in this Asia Cup still not sold out. (TOI). pic.twitter.com/qsX3WTfBac
— Tanuj (@ImTanujSingh) September 10, 2025
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கபடுவதற்காக ஆன்லைனில் சாளரம் ஓபன் செய்யும்போதெல்லாம், குறைந்தது 2 மணிநேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும். ஆனால், 2025 ஆசியக் கோப்பையில் இன்னும் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிடவில்லை. இதற்குக் காரணம், டிக்கெட் விலைகள் மிக அதிகமாக இருப்பதால், சாதாரண பார்வையாளர்கள் அவற்றை வாங்கத் தயங்குவதாக கூறப்படுகிறது. பல டிக்கெட் போர்டல்களில், VIP Suites East இன் விலை இரண்டு இருக்கைகளுக்கு சுமார் ரூ.2.5 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும், சாதாரண உணவு மற்றும் டிரிங்ஸ், VIP கிளப் மற்றும் லவுஞ்ச் நுழைவு, தனியார் நுழைவு மற்றும் பார்க்கிங் பாஸ் போன்ற வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் விலை மிகவும் அதிகம் என்பதால் சிறு தயக்கம் அனைவரது மனதில் எழுகிறது.
அதேபோல், ராயல் பாக்ஸின் விலை சுமார் ரூ.2.3 லட்சம், ஸ்கை பாக்ஸின் விலை சுமார் ரூ.1.6 லட்சம் மற்றும் பிளாட்டினம் டிக்கெட்டின் விலை சுமார் ரூ.75,000. அதே நேரத்தில், இரண்டு பேருக்கு சுமார் ரூ.10,000க்கு மலிவான டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
ரசிகர்களின் அதிருப்தி:
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும். ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் வேறுபட்டது. டிக்கெட்டுகள் மெதுவாக விற்பனை ஆவதற்கு விலைகள் முக்கிய காரணம் என்று நம்பப்படுகிறது. பல ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர் மற்றும் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்குச் சென்று போட்டியை ரசிக்க முடியாத அளவுக்கு ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: ராக்கெட்டை போல நறுக்கென யார்க்கர்.. யுஏஇ தொடக்க வீரரை தூக்கிய பும்ரா!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டி:
கடந்த பல வருடங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி போட்டிகள் மட்டுமே இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தங்கள் அணிகள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவதை கண்டுகளித்து வருகின்றனர். இந்த போட்டி குறித்து எப்போதும் மிகுந்த உற்சாகம் நிலவுவதற்கு இதுவே காரணம்.