Asia Cup 2025: அதிகபட்சம் மகாராஷ்டிரா! தமிழக வீரருக்கு வாய்ப்பா..? இந்திய அணியில் இடம் பிடித்த மாநில வாரியான வீரர்கள் விவரம்!
India Cricket Team: 2025 ஆசிய கோப்பைக்கான 15-உறுப்பினர் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆசிய கோப்பைக்கான (2025 Asia Cup) சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 19ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது. இதுவரை இந்திய அணிக்காக டி20 தொடர்களில் மட்டும் கேப்டனாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ், முதல் முறையாக பல நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை போன்ற போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், இந்திய அணியின் (Indian Cricket team) துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. வலுவான அணியாக பார்க்கப்படும் இந்திய அணி, 2025 ஆசியக் கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில், 2025 ஆசிய கோப்பைக்காக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
மகாராஷ்டிரா-குஜராத்:
2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதன்படி, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா ஆகியோர் மகாராஷ்டிராவையும், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் குஜராத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
ALSO READ: மீண்டும் கழட்டிவிடப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. பிசிசிஐ விளக்கம்..!
அதேநேரத்தில், இந்திய அணியில் பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். துணை கேப்டன் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பஞ்சாபைச் சேர்ந்தவர் என்பதும், குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஆசியக் கோப்பை அணியில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் டெல்லியைச் சேர்ந்த தலா ஒரு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் மட்டுமே சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்தவரான வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்..?
- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) – மும்பை, மகாராஷ்டிரா
- சுப்மன் கில் (துணை கேப்டன்) – ஃபாசில்கா, பஞ்சாப்
- அபிஷேக் சர்மா – அமிர்தசரஸ், பஞ்சாப்
- திலக் வர்மா – ஹைதராபாத், தெலுங்கானா
- ஹர்திக் பாண்ட்யா – சூரத், குஜராத்
- சிவம் துபே – மும்பை, மகாராஷ்டிரா
- அக்ஷர் படேல் – ஆனந்த், குஜராத்
- ஜிதேஷ் சர்மா – அமராவதி, மகாராஷ்டிரா
- ஜஸ்பிரித் பும்ரா – அகமதாபாத், குஜராத்
- அர்ஷ்தீப் சிங் – குணா, மத்திய பிரதேசம்
- வருண் சக்ரவர்த்தி – சென்னை, தமிழ்நாடு
- குல்தீப் யாதவ் – உன்னாவ், உத்தரபிரதேசம்
- சஞ்சு சாம்சன் – திருவனந்தபுரம், கேரளா
- ஹர்ஷித் ராணா – கெவ்ரா, டெல்லி
- ரிங்கு சிங் – அலிகார், உத்தரபிரதேசம்
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? கேள்வி எழுப்பிய நிருபர்.. செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!
2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
Asia Cup 2025 squad announced! 📢
Shubman Gill steps up as vice-captain while Jaiswal and Iyer miss the cut.. 👀
Happy with the squad?#AsiaCup #AsiaCup2025 #SuryakumarYadav #ShubmanGill pic.twitter.com/Zobi6nPeV5
— OneCricket (@OneCricketApp) August 19, 2025
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா , அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்சித் ராணா, ரிங்கு சிங்