Asia Cup 2025: ஆசிய கோப்பை இன்று முதல் தொடக்கம்.. A முதல் Z வரை அனைத்து விவரங்களும் இங்கே!
Asia Cup Schedule: 2025 செப்டம்பர் 9 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு லீக் சுற்றுகளுக்குப் பிறகு சூப்பர்-4 சுற்று மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும். இந்தக் கட்டுரை, பங்கேற்கும் அணிகளின் வீரர் பட்டியல் மற்றும் முழுமையான போட்டி அட்டவணையை வழங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி
2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) போட்டியானது இன்று அதாவது 2025 செப்டம்பர் 9ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த முறை ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் நடைபெறும். போட்டியின் முதல் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங்கிற்கு இடையே நடைபெறும். 2025 ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா (Indian Cricket Team), பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு குழுவிலும், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் மற்றொரு குழுவிலும் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. முதல் லீக் கட்டத்தில் அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகள் விளையாடும். இதன் பிறகு சூப்பர்-4 சுற்று நடைபெறும். இறுதியாக, இறுதிப் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில், 2025 ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் விவரம் மற்றும் முழு அட்டவணையை தெரிந்து கொள்வோம்.
பங்கேற்கும் அணிகளின் முழு விவரம்:
இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி.
ALSO READ: 1984 முதல் 2023 வரை.. ஆசியக் கோப்பை பைனலில் ஆட்ட நாயகன் விருதை வென்றவர்கள்..!
பாகிஸ்தான் அணி:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹரிஸ், முகமது நவாஸ், முகமது நவாஸ், முகமது நவாஸ். சுஃபியான் முகீம்.
இலங்கை அணி:
சரித் அசலங்கா (கேப்டன்), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, கமில் மிஷார, தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லலகே, சாமிக கருணாரத்னே, மஹிஷ் தீக்ஷன, மஹிஷ் தீக்ஷன, டி. சமீர மற்றும் பினுர பெர்னாண்டோ.
ஆப்கானிஸ்தான் அணி:
ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், முஜீப், ரஹ்மான், குர்ஹான் அல்லா மாலிக், நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி.
வங்கதேச அணி:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், சைஃப் ஹசன், தௌஹித் ஹ்ரிதயோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், காசி நூருல் ஹசன் சோஹன், ஷேக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அஹ்மத், முஸ்தாபிஸ்ன், முஸ்தாபிஸ்ன், முஸ்தாப்ஜின், அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் சைபுதீன்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி:
முஹம்மது வாசிம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கௌசிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோயிப், ராகுல் கான், சாப்ரா சிம், ரோஹித் கான், ரோஹித் கான் மற்றும் ரோஹித் கான்.
ஹாங்காங் அணி:
யாசின் முர்தாசா (கேப்டன்), பாபர் ஹயாத், ஜீஷன் அலி, நியாசகத் கான் முகமது, நஸ்ருல்லா ராணா, மார்ட்டின் கோட்ஸி, அன்ஷுமன் ராத், கல்ஹான் மார்க் சல்லு, ஆயுஷ் ஆஷிஷ் சுக்லா, முகமது அய்ஜாஸ் கான், அதிக் உல் ரஹ்மான், ஆதிக் உல் ரஹ்மான் முகமது அர்ஷாத், அலி ஹசன், ஷாஹித் வாசிஃப், கசன்ஃபர் முகமது, முகமது வஹீத், அனஸ் கான் மற்றும் இஷான் கான்.
ஓமன் அணி:
ஜதீந்தர் சிங் (கேப்டன்), ஹம்மத் மிர்சா, விநாயக் சுக்லா, சுபியான் யூசுப், ஆஷிஷ் ஒடேடரா, அமீர் கலீம், முகமது நதீம், சுபியான் மஹ்மூத், ஆர்யன் பிஷ்ட், கரண் சோனாவாலே, ஜிகாரியா இஸ்லாம், ஹஸ்னைன் ஷா, பைசல் ஷா, முஹம்மது இம்ரான், ஷாகேல்வா சமத் கான், நதீம் கான்.
ALSO READ: இந்திய அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எது..? ஏல திட்டத்தை வகுத்த பிசிசிஐ!
2025 ஆசிய கோப்பைக்கான முழு அட்டவணை:
லீக் ஸ்டேஜ் போட்டிகள்
- 2025 செப்டம்பர் 9: ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் – இரவு 8 மணி – அபுதாபி
- 2025 செப்டம்பர் 10: இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 11: வங்கதேசம் vs ஹாங்காங் – இரவு 8 மணி – அபுதாபி
- 2025 செப்டம்பர் 12: பாகிஸ்தான் vs ஓமன் – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 13: வங்கதேசம் vs இலங்கை – இரவு 8 மணி – அபுதாபி
- 2025 செப்டம்பர் 14: இந்தியா vs பாகிஸ்தான் – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 15: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs ஓமன் – மாலை 5:30 மணி – அபுதாபி
- 2025 செப்டம்பர் 15: இலங்கை vs ஹாங்காங் – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 16: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் – இரவு 8 மணி – அபுதாபி
- 2025 செப்டம்பர் 17: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 18: இலங்கை vs ஆப்கானிஸ்தான் – இரவு 8 மணி – அபுதாபி
- 2025 செப்டம்பர் 19: இந்தியா vs ஓமன் – இரவு 8 மணி – அபுதாபி
சூப்பர்-4 சுற்றுப் போட்டிகள்
- 2025 செப்டம்பர் 20: B1 vs B2 – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 21: A1 vs A2 – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 23: A2 vs B1 – இரவு 8 மணி – அபுதாபி
- 2025 செப்டம்பர் 24: A1 vs B2 – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 25: A2 vs B2 – இரவு 8 மணி – துபாய்
- 2025 செப்டம்பர் 26: A1 vs B1 – இரவு 8 மணி – துபாய்
இறுதிப் போட்டி: 2025 செப்டம்பர் 28 – இரவு 8 மணி – துபாய்