IPL 2026: எல்.எஸ்.ஜியிலும் கிடைக்காத வாய்ப்பு.. மாநில கிரிக்கெட்டுக்கு செல்லும் அர்ஜூன் டெண்டுல்கர்!

LSG Arjun Tendulkar: முன்னதாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால், இப்போது இவர் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது கோவா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார். கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த 12 மாதங்களில் அர்ஜுன் டெண்டுல்கர் வேறு எந்த மாநில லீக்கிலும் பங்கேற்காததால், டி20 மும்பை லீக்கில் பங்கேற்க அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

IPL 2026: எல்.எஸ்.ஜியிலும் கிடைக்காத வாய்ப்பு.. மாநில கிரிக்கெட்டுக்கு செல்லும் அர்ஜூன் டெண்டுல்கர்!

அர்ஜூன் டெண்டுல்கர்

Published: 

01 May 2026 19:27 PM

 IST

‘கிரிக்கெட்டின் கடவுள்’ சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரின்போது மற்றொரு லீக்கில் விளையாடுவதற்காக செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ( அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தாலும், இந்த சீசனில் இதுவரை லக்னோ அணி அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கவில்லை. இதற்கிடையில், டி20 மும்பை லீக்கின் 4வது சீசனுக்கு முன்பு நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க அர்ஜுன் டெண்டுல்கர் தகுதியானவர் என்றும் விளையாடலாம் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ALSO READ: கடைசி 3 இடங்களில் KKR, MI, LSG.. பிளே ஆஃப் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்..?

அர்ஜுன் டெண்டுல்கரின் அடுத்தகட்ட திட்டம்:

முன்னதாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால், இப்போது இவர் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது கோவா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார். கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த 12 மாதங்களில் அர்ஜுன் டெண்டுல்கர் வேறு எந்த மாநில லீக்கிலும் பங்கேற்காததால், டி20 மும்பை லீக்கில் பங்கேற்க அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

டி20 மும்பை லீக்கின் 4வது சீசனில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளுக்குமான ஏலம் வருகின்ற 2026 மே 2ம் தேதி நடைபெறும். அதே சமயம், போட்டித்தொடரானது வருகின்ற 2026 ஜூன் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நடைபெறும். டி20 போட்டித்தொடர்களை ஏற்பாடு செய்யும் மாநில சங்கங்களுக்கான பிசிசிஐ வழிகாட்டுதல்களின்படி, வீரர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தவும், அதிகப்படியான உடல் சோர்வைத் தவிர்க்கவும், ஒவ்வொரு வீரரும் 12 மாத காலத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு கிரிக்கெட் லீக்கில் (இந்தியன் பிரீமியர் லீக்கைத் தவிர்த்து) மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார். இந்த 12 மாத காலமானது, வீரர் கடைசியாகப் பங்கேற்ற போட்டித்தொடர் முடிவடைந்த நாளிலிருந்து தொடங்குகிறது.

மேலும் அந்த வழிகாட்டுதல்களின்படி, உதாரணமாக, ஒரு வீரர் 31 ஆகஸ்ட் 2024 அன்று முடிவடையும் ஒரு மாநில சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டி20 தொடரில் பங்கேற்றால், அவர் 1 செப்டம்பர் 2025 வரை வேறு எந்த மாநில சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு எந்த டி20 தொடரிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்.

அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த 12 மாதங்களில் எந்தவொரு மாநில சங்கம் ஏற்பாடு செய்த டி20 லீக்கிலும் விளையாடவில்லை. அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலும், ரஞ்சி கோப்பையில் கோவா அணியிலும் இடம்பெற்றிருந்தார். அதன்படி, அர்ஜூன் டெண்டுல்கர் இந்த டி20 லீக்குகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.

ALSO READ: படிதார் அடித்த பந்து.. தரையில் பட்டு கேட்ச்? விவாதத்தை கிளப்பும் வீடியோ!

லக்னோ அணியின் செயல்திறன்:

ஐபிஎல் 2026 சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று -1.106 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தில் உள்ளது.

 

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..