IND W vs AUS W Semi Final: கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்.. நாக் அவுட்டில் நங்கூர ரன் சேஸ்.. இந்திய மகளிர் குவித்த சாதனைகள்!
IND W vs AUS W Record Made Semifinal: ஆஸ்திரேலிய மகளிர் அணி இதுவரை 6 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது, நான்கு முறை வெற்றியும், இரண்டு முறை தோல்வியும் அடைந்துள்ளது. இந்த இரண்டு தோல்விகளும் இந்தியாவுக்கு எதிராகவே வந்தன. முந்தைய தோல்வி 2017ம் ஆண்டு அரையிறுதி போட்டியில் நடந்தது.

இந்திய மகளிர் அணி
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி (Indian Womens Cricket Team) வெற்றிபெற்று 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணியும் முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பை பைனலை எட்டியுள்ளது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக இந்திய அணி துரத்திய இலக்கானது மிகப்பெரிய சாதனையாக அமைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸின் (Jemimah Rodrigues) சதம் இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதன்மூலம், இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. அதனை பற்றி விரிவாக பார்ப்போம்.
ALSO READ: இது வெற்றியின் கண்ணீர்.. தந்தையை கட்டிப்பிடித்த கலங்கிய ஜெமிமா!
பல சாதனைகள் குவிப்பு:
📽️ Raw reactions after an ecstatic win 🥹
The #WomenInBlue celebrate a monumental victory and a record-breaking chase in Navi Mumbai 🥳
Get your #CWC25 tickets 🎟️ now: https://t.co/vGzkkgwXt4 #TeamIndia | #INDvAUS pic.twitter.com/MSV9AMX4K1
— BCCI Women (@BCCIWomen) October 31, 2025
- ஆண்கள் அல்லது பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, கடந்த 2015 ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் அதிகபட்சமாக நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்கள் குவித்தது.
- இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரு புதிய சாம்பியன் அணியாக மகுடம் சூட இருக்கிறது. அதேநேரத்தில், முதல் முறையாக ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியோ இல்லாமல் மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
- இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 339 ரன்கள் ரன் சேசிங் செய்தது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் மட்டுமல்ல, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலும் மிகப்பெரியது. இந்த 2025 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக 331 ரன்களை சேசிங் செய்தது. இலங்கை மகளிர் அணி இதற்கு முன்பு கடந்த 2024ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 302 ரன்களை சேசிங் செய்திருந்தது.
- மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் இலக்கு துரத்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2017 அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி அடித்த 219 ரன்களே நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச சேசிங் சாதனையாக இருந்தது.
- மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா 200 ரன்களுக்கு மேல் இலக்கைத் துரத்தியதில்லை, 300 ரன்களுக்கு மேல் துரத்துவது இது முதல்முறை
- ஆஸ்திரேலிய மகளிர் அணி இதுவரை 6 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது, நான்கு முறை வெற்றியும், இரண்டு முறை தோல்வியும் அடைந்துள்ளது. இந்த இரண்டு தோல்விகளும் இந்தியாவுக்கு எதிராகவே வந்தன. முந்தைய தோல்வி 2017ம் ஆண்டு அரையிறுதி போட்டியில் நடந்தது.
ALSO READ: சதம் அடித்து ஜெமிமா சம்பவம்.. 339 ரன்களை துரத்தி பைனலுக்கு முன்னேறிய இந்திய மகளிர்!
- 2022 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல், ஆஸ்திரேலியாவின் 15 போட்டிகளின் நீண்ட வெற்றி பாதைக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.
- 2022 இறுதிப் போட்டியில் நடாலி ஸ்கிவர் பிரண்ட் (148*) சதம் அடித்த பிறகு, உலகக் கோப்பை நாக் அவுட் ரன் சேஸில் சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பெற்றார்.
- உலகக் கோப்பை நாக் அவுட்டில் சேஸிங்கில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் பெருமையைப் பெற்றார். இதுவரை ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் இந்த சாதனையை எட்டவில்லை. ஆண்கள் கிரிக்கெட்டில், 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் கவுதம் கம்பீரின் 97 ரன்கள் அதிகபட்சமாக இருந்தது.
- இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் போட்டியில் மொத்தம் 679 ரன்கள் குவிக்கப்பட்டன. இது பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் இரு அணிகளும் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இணைந்து 670 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறை. முன்னதாக, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரே போட்டியில் 661 ரன்கள் எடுத்த சாதனையைப் பெற்றிருந்தன. இது 2025 உலகக் கோப்பை லீக் ஸ்டேஜ் போட்டியில் நடந்தது.