T20 World Cup 2026: இந்தியா முதல் இலங்கை வரை.. 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் விவரம்!
T20 World Cup 2026 Squads: கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் காரணமாக, நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி 2025 டிசம்பர் 20ம் தேதி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது.

இந்திய கிரிக்கெட் அணி
2026ம் ஆண்டு தொடங்கியதும் 2026 டி20 உலகக் கோப்பையை (T20 World Cup 2026) காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதன்படி, 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை வரு கின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் 2026 மார்ச் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரமாண்ட உலகக் கோப்பை போட்டியை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றனர். 20 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா போட்டிக்கான அணிகளை சில அணிகள் அறிவித்துள்ளன. இதில், 15 பேர் கொண்ட அணியை அறிவித்த ஒரே நாடு இந்தியா (Indian Cricket Team) மட்டுமே. அதே நேரத்தில், போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கை தனது முதற்கட்ட அணியை அறிவித்துள்ளது. இதன்பிறகு, இலங்கை அணி வருகின்ற 2026 ஜனவரி 7ம் தேதிக்குள் அணியில் மாற்றங்களை செய்து கொள்ளலாம். மீதமுள்ள அணிகள் இன்னும் தங்களது 15 பேர் கொண்ட அணியை வெளியிடாமல் காத்திருக்கின்றன.
ALSO READ: கேப்டனாக சூர்யகுமார் யாதவ்.. இல்லாத கில்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா:
கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் காரணமாக, நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில், 2025 டிசம்பர் 20ம் தேதி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.
இந்தியாவின் 15 பேர் கொண்ட அணி (குரூப் ஏ)
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா , ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
முதற்கட்ட இலங்கை அணி:
தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, ஜனித் லியனகே, சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, வானால் டி ஹனங்க, வானல் ஆராச்சிகே. ரத்நாயக்க, நுவான் துஷார, இஷான் மலிங்க, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த ஹேமந்த, விஜயகாந்த் வியாசாந்த், ட்ரவீன் மேத்யூ.
குரூப் வாரியான அணிகள்:
குரூப் ஏ
- இந்தியா: (இறுதி அணி)
- அமெரிக்கா: அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை
- நமீபியா: அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை
- நெதர்லாந்து: அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை
- பாகிஸ்தான்: அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை
குரூப் பி
- ஆஸ்திரேலியா: விரைவில் அணி அறிவிக்கப்படவுள்ளது.
- இலங்கை (முதற்கட்ட அணி)
- ஜிம்பாப்வே: இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- அயர்லாந்து: அறிவிக்கப்பட உள்ளது
- ஓமன்: அறிவிக்கப்பட உள்ளது
குரூப் சி
- இங்கிலாந்து: அறிவிக்கப்பட உள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ்: இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- வங்கதேசம்: இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- இத்தாலி: அறிவிக்கப்பட உள்ளது
- நேபாளம்: இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ALSO READ: முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.. இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து இளம் அணி களம்!
குரூப் டி
- தென்னாப்பிரிக்கா: அறிவிக்கப்பட உள்ளது
- நியூசிலாந்து: இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- ஆப்கானிஸ்தான்: அறிவிக்கப்பட உள்ளது.
- கனடா: அறிவிக்கப்பட உள்ளது
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: அறிவிக்கப்பட உள்ளது