Vaibhav Suryavanshi: ஆசியக் கோப்பையில் அசத்தலான ஆட்டம்.. 171 ரன்கள் குவித்து சம்பவம் செய்த சூர்யவன்ஷி!

U19 Asia Cup 2025: சில நாட்களுக்கு முன்பு, ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 42 பந்துகளில் 15 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் உதவியுடன் 144 ரன்கள் எடுத்து வைபவ் சூர்யவன்ஷி அபாரமான இன்னிங்ஸை விளையாடினார்.

Vaibhav Suryavanshi: ஆசியக் கோப்பையில் அசத்தலான ஆட்டம்.. 171 ரன்கள் குவித்து சம்பவம் செய்த சூர்யவன்ஷி!

வைபவ் சூர்யவன்ஷி

Published: 

12 Dec 2025 15:00 PM

 IST

ஏ.சி.சி ஆண்கள் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2025 (U19 ASIA CUP) இந்திய அண்டர் 19 அணி  சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது. துபாயில் உள்ள ஐ.சி.சி அகாடமி மைதானத்தில் இன்று அதாவது 2025 டிசம்பர் 12ம் தேதி நடந்த முதல் போட்டியிலேயே இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது  அதிரடியான பேட்டிங் மூலம் தனது திறமையை மீண்டும் இந்த உலகிற்கு காட்டியுள்ளானர். இதுநாள் வரை டி20 வடிவத்தில் மட்டும் கலக்கி வந்த, வைபவ் சூர்யவன்ஷி இப்போது ஒருநாள் போட்டியிலும் தனது பேட்டிங் திறமையை காட்டியுள்ளார். அதாவது, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் 150க்கு மேற்பட்ட ரன்களை குவித்தார்.

ALSO READ: குறையும் ரோஹித் – விராட்டின் சம்பளம்..? கில்லுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிசிசிஐ முக்கிய முடிவு!

முதலில் சீரான தொடக்கம்.. பின்னர் அதிரடி ஆட்டம்..


இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ஆரம்பத்தில் நிலைக்க வேண்டும் என்பதற்காக மெதுவாக தொடங்கினார். தான் நிலைபெற்றுவிட்டோம் என்பதை தெரிந்தது சூர்யவன்ஷி தனது ஃபேவரைட்டான கிளாசிக் ஷாட்களையும், பவர்-ஹிட்டிங்கால் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அதாவது வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யவன்ஷி பின்னர் 56 பந்துகளில் சதத்தை கடந்தார். இதனுடன் மட்டும் நிற்காமல் அடுத்தடுத்த பந்துகளும் எல்லை கோடுகளை தாண்டி விழுந்தது.

இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உதவியுடன் 171 ரன்கள் குவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷிக்கு 2 முறை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது. முதலில் 28 ரன்களிலும், பின்னர் 85 ரன்களிலும் சூர்யவன்ஷி கொடுத்த வாய்ப்பை தவறவிட்டனர். இதை சரியாக பயன்படுத்தி கொண்ட சூர்யவன்ஷி 171 ரன்கள் குவித்து அசத்தினார்.

ALSO READ: 7 போட்டிகளில் 7 தோல்விகள்.. 210 ரன்களை துரத்தும்போது சொதப்பும் இந்திய அணி!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025லிலும் சதம் அடித்த சூர்யவன்ஷி:

சில நாட்களுக்கு முன்பு, ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 42 பந்துகளில் 15 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் உதவியுடன் 144 ரன்கள் எடுத்து வைபவ் சூர்யவன்ஷி அபாரமான இன்னிங்ஸை விளையாடினார். இதன்மூலம், சூர்யவன்ஷி விரைவாக இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையையும் சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

25 மணி நேரம்... உலகின் நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா
ஒவ்வொரு மாதமும் 150 யூனிட் இலவசம், மக்களுக்கு இலவச மின்சாரம் எப்படி கிடைக்கும்?
நீலாம்பரி கதாப்பாத்திரத்துக்கு முதல் சாய்ஸ் யார் தெரியுமா? ரஜினிகாந்த் பகிர்ந்த சீக்ரெட்
உத்திரப்பிரதேசத்தில் தொடரும் ஓநாய் தாக்குதல்.. பீதியில் பொதுமக்கள்..