வியாழக்கிமையில் விஷ்ணுவை இப்படி வழிபடுங்க.. இதெல்லாம் நடக்கும்!

சாஸ்திரத்தில் வியாழக்கிழமை குரு பகவானுக்கும், விஷ்ணுவுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் நாம் விஷ்ணுவை வழிபட்டால் ஜாதகத்தில் குரு பகவான் பலன் பெறுவார் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் குருவின் நிலையை வலுப்படுத்த எப்படியெல்லாம் வழிபட வேண்டும் என நாம் பார்க்கலாம்.

வியாழக்கிமையில் விஷ்ணுவை இப்படி வழிபடுங்க.. இதெல்லாம் நடக்கும்!

விஷ்ணு பகவான்

Updated On: 

16 Oct 2025 10:32 AM

 IST

இந்து மதத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் தொடங்கி வருடத்தின் 365 நாட்களும் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகிறது. அமாவாசை, பௌர்ணமி தவித்து வளர்பிறை மற்றும் தேய்பிறையில் தலா 14 திதிகள் கணக்கிடப்பட்டு நாம் செய்யக்கூடிய செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில் வாரத்தின் நடுநாளான வியாழக்கிழமை குரு பகவான் மற்றும் விஷ்ணுவுக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நாம் விஷ்ணுவை வழிபட்டால், குருவின் ஆசிகளும் கிடைத்து வாழ்க்கையில் செல்வந்தராகவும் அதிர்ஷ்டசாலியாகவும் மாறலாம் என்பது ஐதீகமாக உள்ளது.

ஜாதகத்தில் குருவின் நிலையை வலுப்படுத்த வியாழக்கிழமை வழிபாடு முக்கியம் என சொல்லப்படுகிறது. குரு மிகவும் பலமாக இருப்பவர்களின் வாழ்க்கையில் எல்லாம் நல்லதாகவே இருக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமை நாளில் நாம் அதிகாலையில் எழுந்து, புனித நீராடி, சூரிய பகவானுக்கு பிரார்த்தனை செய்து, பின்னர் பூஜை அறையில் விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். பஞ்சு திரியுடன் பசு நெய்யில் விளக்கை ஏற்றி, அதில் சிறிது குங்குமப்பூவைச் சேர்க்கவும். நீங்கள் இதைச் செய்தால், விஷ்ணு மகிழ்ச்சியடைந்து உங்கள் மீது கருணை காட்டுவார் என நம்பப்படுகிறது.

Also Read: கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்ததாக சொல்லப்படும் 4 ராசிக்காரர்கள்!

இந்நாளில் விஷ்ணு சாலிசா மற்றும் விஷ்ணு சஹஸ்த்ரநாமத்தை நாம் பாராயணம் செய்தால், உங்கள் குடும்பத்தினர் விஷ்ணுவின் அருளைப் பெற்று மகிழ்ச்சி பொங்க இன்புற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும். மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என சொல்லப்படுகிறது. குச ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போது மட்டுமே விஷ்ணு சாலிசா மற்றும் விஷ்ணு சஹஸ்த்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வியாழக்கிழமை நாளில் மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும். அதுமட்டுமல்லாமல் நெற்றியில் சந்தனம், மஞ்சள் போன்றவற்றால் திலகமிட வேண்டும்.  இறை வழிபாட்டின்போது விஷ்ணுவுக்கு பால் சம்பந்தப்பட்ட பொருட்களை சேர்த்து படைக்கலாம். மேலும் மஞ்சள் நிறப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை வைக்கலாம். இந்த நாளில் வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்களை தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்தால் மிக புண்ணியம் கிடைக்கும்.

Also Read:  தமிழகத்தின் திருப்பதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?

மேலும் வியாழக்கிழமை தினத்தில் குங்குமப்பூ பூஜை செய்வது ஜாதகத்தில் கிரக பலத்தை மேம்படுத்துகிறது. அன்று இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், பாலில் குங்குமப்பூ கலந்து குடிக்கலாம். மேலும் இந்த நாளில் நாம் வாழை மரத்தை வழிபடுவது விஷ்ணுவை திருப்திப்படுத்தும் என்பது ஐதீகமாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரும் என கூறப்படுகிறது. அதிகாலையில் இதைச் செய்தால், அது மிகவும் நல்ல பலன்களைத் தரும். அந்நாளில் காலையில் குளித்த பிறகு வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றிநெய் தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். தொடர்ந்து அந்நாளில் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.