Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: மிதுன ராசியில் குரு பகவான்.. இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!

2025 ஜூன் 9ம் தேதி வியாழன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்து தனலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. கடகம், துலாம், கன்னி, மீனம் ராசிகளுக்கு இது அதிர்ஷ்டகாலம். நிதி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: மிதுன ராசியில் குரு பகவான்.. இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Jun 2025 14:03 PM

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிரகப் பெயர்ச்சிகள் பொதுவானவை என்றாலும் அவை 12 ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. அத்தகைய நவ கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக வியாழன் கிரகம் பார்க்கப்படுகிறது. இந்த கிரகம் 2025, ஜூன் 9 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளது. இது தனலட்சுமி ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த ராஜ யோகத்தால், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு நடக்கும் அனைத்தும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதில் வெற்றி பெறுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாக நிதி ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் பலன்களைப் பெறும் அந்த ராசிகள் என்ன என்பது பற்றிக் காணலாம்.

  1. கடகம்: தனலட்சுமி ராஜயோகத்தால், கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வகையில் லட்சுமி கடாக்ஷம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனால் ராசிக்காரர்களின் கடன்கள் தீரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் நிதி ரீதியாக பலன்களைப் பெறுவார்கள். வருமான வரும் வழிகள் விரிவடையும் வாய்ப்புள்ளது. அதைத் தவிர, இதுவரை வசூலாகாமல் இருந்த கடன்கள் கைக்கு வரும். ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவார்கள். வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு விரைவில் செய்தி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பயணங்கள் லாபகரமாக இருக்கும்.
  2. துலாம்: தனலட்சுமி ராஜயோகம் காரணமாக, துலாம் ராசிக்காரர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். அவர்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும் காலம் கனிந்துள்ளது எந்த தொழில் செய்தாலும் அவர்கள் நிதி ரீதியாக வெற்றியும், லாபமும் பெறுவார்கள். எதிர்பாராத வழிகளில் பணம் ராசிக்காரர்களின் கைகளுக்கு வரும். அலுவலகத்தில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடன் பயணம் செய்வீர்கள்.
  3. கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு தனலட்சுமி ராஜயோகத்தால் வீட்டில் செல்வம் பெருகும் வாய்ப்பு அமையும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடன்களிலிருந்து விடுபடும் சூழல் உண்டாகும். கடந்த காலத்தில் தொழில் துறையில் நீங்கள் செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் உறவுகள் வலுப்பெறும். சுப செய்திகள் அதிகமாக இருக்கும்.
  4. மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் புதனின் சேர்க்கையால் எல்லாவற்றிலும் நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நீதிமன்ற விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். தொழிலதிபர்கள் மற்றும் சேவைத் துறையில் உள்ளவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். வருமானம் பல வழிகளில் பெருகும்.

(ஆன்மிக மற்றும் ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)