நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா…கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

Nellaiappar Temple Thaipusam Fflag Hoisting: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலில் இன்று காலை தைப்பூச திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷெகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா...கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

Published: 

23 Jan 2026 08:30 AM

 IST

தமிழகத்தில் உள்ள கோயில்களில் வரும் பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து, விரதம் இருந்து முருகன் கோவில்களுக்கு நடைபயணமாக சென்று வருகின்றனர். இதே போல, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் இன்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 23) காலை நடைபெற்றது. அதன்படி, இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சுவாமி சன்னதியில் உள்ள பிள்ளையார் கொடி மரத்தில் தைப்பூச திருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் நெல்லையப்பர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.

நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி

அதன்படி, வருகிற திங்கள்கிழமை ( ஜனவரி 26) காலை 11 மணிக்கு கோவில் சன்னதியில் ” நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, அன்று மாலை 6 மணி அளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது. பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. அதன்படி, பிப்ரவரி 1-ஆம் தேதி தைப்பூசத்தையொட்டி, மாலை நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.

மேலும் படிக்க: தைப்பூசத்தில் அப்படி என்ன சிறப்பு?.. எதனால் கொண்டாடுகிறோம்?..

தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

அங்கு, நெல்லையப்பர் சுவாமி மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், இதன் பின்னர், தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர், பிப்ரவரி 2- ஆம் தேதி ( திங்கள்கிழமை) காலை 10 மணி அளவில் கீழ ரத வீதி சௌந்தர சபை மண்டபத்தில் நடராஜன் திருநடனக் காட்சி, சந்தி விநாயகர் கோவில் அருகே திருக்காட்சி வைபவம் ஆகியவை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 3- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி் அளவில் சொக்கப்பனை முக்கு அருகே உள்ள சந்திர புஷ்கரணி எனப்படும் வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆறுபடை முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா

இதே போல, மற்ற கோவில்களிலும் தைப்பூச திருவிழா கொடி ஏற்றப்பட்டு, தினந்தோறும் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. குறிப்பாக முருகனின் ஆறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கொடி ஏற்றம் மிக விமர்சியாக தொடங்கப்பட்டு தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க: தைப்பூச திருவிழா…பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து!

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..