Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது? அதன் சிறப்புகள் என்ன?

Thai Amavasai : இந்து முறைப்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தை அமாவாசை இந்த ஆண்டு ஜனவரி 18, 2026 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இன்றைய தினம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவர்களது ஆன்மாவை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது? அதன் சிறப்புகள் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Jan 2026 15:32 PM IST

தை அமாவாசை ஆண்டில் மிகவும் முக்கியமான அமாவாசை தினங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபடுவதற்கான சிறந்த நாளாக அமாவாசை விளங்குகிறது. 2026-ம் ஆண்டில் ஜனவரி 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்து முறைப்படி, அமாவாசை முன்னோர்களை வழிபடும் நாளாகும். அதன் படி ஒவ்வொரு அமாவாசை நாளிலும் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினரைப் பார்ப்பதாகவும் நம்பப்படுகிறது.இதன் காரணமாக மக்கள் அன்றைய தினம் அவர்களது வாரிசுகள் ராமேஸ்வரம் (Rameswaram) போன்ற புனித தலங்களிலும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் அளிப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இந்த நாளில் முன்னோர்களுக்கு அவர்களது குடும்பத்தினரால் அளிக்கப்படும் தர்ப்பணம், தானங்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, பசியும் தாகமும் தீர்ந்து, மனமகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் வழங்குவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. அமாவாசை தினங்களில் தர்ப்பணம் செய்யத் தவறினால் பித்ரு தோஷம் ஏற்படும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதையும் படிக்க : தை அமாவாசை 2026: யார் என்ன செய்ய வேண்டும்? விரத முறை.. முழு விவரம்!!

தை அமாவாசை ஏன் சிறப்பு?

தமிழ் மரபுப்படி தை மாதத்தில் ஆண்டின் முதல் அமாவாசையான தை அமாவாசை மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மற்ற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள், தை அமாவாசையில் அதைச் செய்து பித்ரு தோஷத்திலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. அப்படி ஒவ்வொரு ஆண்டும் செய்பவர்கள் குடும்ப பிரச்னைகள் தீர்வு பெறவும், ஆரோக்கியம், செல்வம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கவும் இது உதவுகிறது.

2026 தை அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் எது?

இந்த தை அம்மாவாசை இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய நாளில் ஜனவரி 18, 2026 அன்று அதிகாலை 1.20 மணிக்கு துவங்கி, ஜனவரி 19, 2026 அன்று அதிகாலை 2.31 மணி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அம்மாவாசை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அது சூரியனுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தை அமாவாசை 2026.. உங்கள் தடைகள் நீங்க.. இதை செய்ய தவறாதீர்கள்..

அமாவாசை நாளில் செய்ய வேண்டியவை

நம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம், தில ஹோமம், பிண்ட தானம் ஆகியவற்றை செய்யலாம். குறிப்பாக அன்றைய நாளில் காசி, ஹரித்வார், ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற புனித தலங்களில் தர்ப்பணம் செய்யப்படுகிறது. மேலும், அந்ந்த பகுதிகளில் உள்ள ஆறுகள், குளம் போன்ற நீர் நிலைகளிலும் தர்ப்பணம் செய்யலாம். இதே போன்ற புனித தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே எள் மற்றும் நீர் கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். அப்படி செய்தால் அவர்களது ஆத்மா சாந்தியடைந்து நமக்கு ஆசிர்வாதங்களை வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.