Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: மாலையில் இதெல்லாம் செய்யாதீங்க.. லட்சுமி தேவி அருள் கிடைக்காது!

மாலை வேளையில் லட்சுமி தேவியின் அருளைப் பெற சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சமையலறையை சுத்தமாக வைத்திருத்தல், பாத்திரங்களை இரவல் கொடுக்காதிருத்தல், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டைத் துடைக்காதிருத்தல் போன்றவை மிக முக்கியமான விதிகளாக பார்க்கப்படுகிறது.

Vastu Tips: மாலையில் இதெல்லாம் செய்யாதீங்க.. லட்சுமி தேவி அருள் கிடைக்காது!
லட்சுமி தேவி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Sep 2025 20:53 PM IST

இந்து மதத்தில் பல்வேறு விதமான தெய்வங்களும், அவர்களுக்கென பல்வேறு விதமான வழிபாடுகளும் உள்ளது. அப்படியான நிலையில் லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறார். அப்படியான லட்சுமி தேவி கோபப்பட்டால், வாழ்க்கையில் பிரச்னைகள் நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. அப்படியான லட்சுமி தேவியை ஈர்க்க, மாலையில் பின்பற்ற வேண்டிய வாஸ்து சாஸ்திர குறிப்புகளைப் பற்றி ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி தவறுதலாக கூட மாலையில் சில விஷயங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

அதன்படி, சமையலறை என்பது வீட்டில் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகும். அத்தகைய சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும் என நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து சாஸ்திரப்படி படுக்கைக்குச் செல்வதற்கு முன் சமையலறை மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும், அதை அப்படியே காயப்போடக்கூடாது என பரிந்துரைக்கிறது.

Also Read:  வீட்டு தோட்டத்தில் மருதாணி மரம் வளர்க்கலாமா? – வாஸ்து சொல்லும் டிப்ஸ்!

மேலும், மாலையில் சமையல் பாத்திரங்களை யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் துடைப்பத்தால் வீட்டை சுத்தம் செய்வது அசுபமானதாக பார்க்கப்படுகிறது. இதைச் செய்வது லட்சுமி தேவி வீட்டில் இருப்பதைத் தடுக்கும் என்றும் அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்றும் நம்பப்படுகிறது.

அதேசமயம் மாலையிலோ அல்லது இரவிலோ நகங்கள், முடிகளை வெட்டக்கூடாது. ஏனென்றால் மாலை நேரத்தில் தான் லட்சுமி தேவி வருகை இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வெட்டப்பட்ட நகங்கள், முடிகள் அழுக்காகக் கருதப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் லட்சுமி தேவிக்கு உகந்த துளசி இலைகளை மாலையில் பறிக்கக்கூடாது.

Also Read: Vekkaliyamman Temple: நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!

மேலும், மாலையில் வாசலிலோ அல்லது படிகளிலோ உட்காரக்கூடாது. இது லட்சுமி தேவி வருகையை தடுக்கும் என்று நம்பப்படுகிறது. இரவில் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உங்கள் தலைமுடியை சீவுவது எதிர்மறை சக்திகளை ஈர்ப்பதாக நம்பப்படுகிறது. இரவில் விசில் அடிப்பது வீட்டில் எதிர்மறை சக்திகளை ஈர்ப்பதாக சொல்லப்படுகிறது. இது நிதி உறுதியற்ற தன்மை மற்றும் கஷ்டத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. எக்காரணம் கொண்டும் பணம் இருக்கும் பையை தரையில் வைக்காதீர்கள்.அதனால் நிதி சிக்கல்கல் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை.  டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)