Turmeric Water: வீட்டில் பிரச்னையா இருக்கா? .. மஞ்சள் கலந்த தண்ணீர் போதும்!

இந்து சமூகத்தில் மஞ்சள் புனிதமானது; மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. வழிபாடு, நோய் தடுப்பு, எதிர்மறை ஆற்றல்களை விரட்டுதல் என பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. வீட்டில் மஞ்சள் நீர் தெளிப்பது, குளிக்கும் நீரில் சேர்ப்பது போன்ற பழக்கங்கள் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

Turmeric Water: வீட்டில் பிரச்னையா இருக்கா? .. மஞ்சள் கலந்த தண்ணீர் போதும்!

மஞ்சள் தண்ணீர்

Published: 

13 Jul 2025 12:00 PM

மஞ்சள் என்பது இந்து சமூகத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான புனிதப் பொருளாக கருதப்படுகிறது. ஒரு மளிகை பொருட்கள் வாங்க லிஸ்ட் எழுதுவதாக இருந்தால் கூட சாஸ்திரத்துக்காக முதலில் மஞ்சள் என்ற பெயரை பெரும்பாலானவர்கள் இன்றளவும் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது சாஸ்திரத்தின்படி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. மஞ்சள் மூலிகை பண்புகளை கொண்டிருப்பதால் இதனை குளிக்கும்போதும் பயன்படுத்துகின்றனர். இது மங்களகரமானது மட்டுமல்லாமல் நாம் தெரியாமல் செய்த பாவங்களை கூட போக்கும் என நம்பப்படுகிறது. மஞ்சளானது நம்மை சுற்றியுள்ள தீய சக்திகளை விரட்டுவதோடு மட்டுமல்லாமல் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தியாகவும் திகழும் என ஐதீகமாகப் பார்க்கப்படுகிறது.

வழிபாட்டு தலங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில் கூட மஞ்சள் கண்டிப்பாக இடம்பெறும். இடத்திற்கு ஏற்றவாறு விரலி மஞ்சள், பொடி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. சிலர் வீட்டில் மஞ்சள் பொடி கலந்த நீரை வாசல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தெளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் காணாமல் போகும் என நம்பப்படுகிறது. மஞ்சள் நீர் வீட்டில் பாசிட்டிவான சக்திகளை ஈர்த்து செழிப்பை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.

Also Read: கிரகங்களின் தாக்கத்தால் அவதியா? – இப்படி விளக்கேற்றினால் தீர்வு கிட்டும்!

மஞ்சள் நீரில் இருந்து எழும் நறுமணம் மன அமைதியை மேம்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பது முற்பிறவிகளில் நீங்கள் செய்த பாவங்களைப் போக்கும். மஞ்சளில் மருத்துவ குணங்களைக் கொண்ட குர்குமின் உள்ளது. இதனால் கிருமி நாசினியாகவும் பயன்பட்டு நம்மையும், குடும்பத்தினரையும் நோய் பாதுகாப்பில் இருந்து காப்பாற்றுகிறது. அதேபோல் நீங்கள் எந்தவிதமான இறை வழிபாடு செய்தாலும் அதில் மஞ்சள் கலந்த நீரை ஒரு பாத்திரம் அல்லது டம்ளரில் வைத்து வணங்க வேண்டும்.

மஞ்சள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பாள் என்பது ஐதீகமாகும். அதனால் தான் மஞ்சள் சரியாக பயன்படுத்தப்படுகிறது. உங்களைச் சுற்றி மஞ்சள் நிறம் இருக்கும்போது நீங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத வளர்ச்சியை நோக்கி செல்வீர்கள் என்பது அர்த்தமாகும். அதேபோல் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி போன்ற காலங்களில் நீங்கள் இருந்தால் மஞ்சள் அந்த தாக்கத்தை குறைக்கும் என சொல்லப்படுகிறது. வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வ வளம் ஈர்க்க ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் நீரில் போட்டு வைக்கலாம் என கூறப்படுகிறது.

Also Read: தெற்கு திசையில் இந்த செடிகளை நட்டால் இவ்வளவு பலன்களா?

நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து குளித்தால் உடலானது ஆரோக்கிய நன்மைகளைப் பெறும் என நம்பப்படுகிறது. எனவே எக்காரணம் கொண்டும் மஞ்சள், மஞ்சள் நீர் பொருட்களை தவிர்க்க வேண்டாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு எந்தவித அறிவியல்பூர்வ விளக்கமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)