Soorasamharam 2025: விண்ணை பிளந்த அரோகரோ முழக்கம்.. சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்த முருகன்..!

Tiruchendur Soorasamharam 2025: முருகனின் 2வது படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இந்த சூரசம்ஹாரத்தை காண பல பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு, திருச்செந்தூர் வந்தடைந்தனர். மேலும் சில பக்தர்கள் முருகனுக்கு காணிக்கையான வேல் கொண்டு அழகு குத்தி கொண்டனர்.

Soorasamharam 2025: விண்ணை பிளந்த அரோகரோ முழக்கம்.. சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்த முருகன்..!

சூரசம்ஹாரம் 2025

Published: 

27 Oct 2025 18:20 PM

 IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை (Soorasamharam 2025) காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முருகனின் 2வது படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் (Thiruchendur Murugan Temple), கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இந்த சூரசம்ஹாரத்தை காண பல பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு, திருச்செந்தூர் வந்தடைந்தனர். மேலும் சில பக்தர்கள் முருகனுக்கு காணிக்கையான வேல் கொண்டு அழகு குத்தி கொண்டனர். இதனை தொடர்ந்து, சூரசம்ஹாரம் பிரமாண்டமாக நடைபெற்றது.

சூரசம்ஹாரம்:


இன்று அதாவது 2025 அக்டோபர் 27ம் தேதி கோயில் கருவறை அதிகாலை 1 மணியளவில் பக்தர்களுக்கு திறக்கப்பட்டு, 1.30 மணியளவில் விஸ்வரூப தீபாராதனையும், பின்னர் அபிஷேகம், யாகசாலை பூஜை, யாகசாலை தீபாராதனையும் நடந்தது. இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கு பிறகு, கடற்கரையில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பல்வேறு அவதாரங்களை எடுத்த சூரபத்மனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகன் தனது திரிசூலத்தால் சூரபத்மனை வதம் செய்தபோது, பக்தர்கள் ’வெற்றி வேல் வீர வேல்’, ’அரோகரா’ உள்ளிட்ட நாமங்களை முழக்கமிட்டனர்.

முருகன் சூரபத்மனை கொன்றபோது அவர் மாமரமாக உருவம் எடுத்தார். இந்த மரத்தை முருகன் தனது வேல் கொண்டு இரண்டாக பிளந்ததாக நம்பப்படுகிறது. மாமரத்தின் ஒரு பாதியை சேவலும், ஒரு மயிலாகவும் மாறியது. பின்னர் சேவலை தனது போர்க்கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றினார்.

தொடர்ந்து வருகின்ற 2025 நவம்பர் 1ம் தேதி அந்தந்த நாட்களில் திருகல்யாணம், தங்கமயில் வாகனம், ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

ALSO READ: கந்த சஷ்டியின் கடைசி நாளில் மட்டும் விரதம் இருக்கலாமா? விரதம் இருப்பதால் என்ன பலன்?

கந்த சஷ்டியின் 6 நாள் திருவிழா கடந்த 2025 அக்டோபர் 21ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பக்தர்கள் விரதம் இருந்தது தங்கள் விருப்பங்கள் நிறைவேற பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராடி பிரார்த்தனை செய்தனர். மேலும், பலர் தங்களது சொந்த ஊர்களில் இருந்து காவடி தூக்கி வந்து முருகனை வழிபட்டனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.