Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அறுபடை வீடுகளும் இப்போது ஒரே இடத்தில் … மதுரையில் சிறப்பு தரிசன ஏற்பாடு!

Murugan Devotees' Meet: மதுரையில் 2025 ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட உள்ளனர்.

அறுபடை வீடுகளும் இப்போது ஒரே இடத்தில் … மதுரையில் சிறப்பு தரிசன ஏற்பாடு!
அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைப்பு Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 17 Jun 2025 08:51 AM

மதுரை ஜூன் 17: மதுரையில் (Madurai) 2025 ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு (Muruga Devotees Conference) நடைபெறுகிறது. மாநாட்டில் யோகி ஆதித்யநாத், பவன் கல்யாண் (Yogi Adityanath, Pawan Kalyan) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டு திடலில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் (Models of the six houses of Lord Murugan) அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தினமும் பூஜை, தரிசனம், பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு லட்சக்கணக்கானோர் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட உள்ளனர். இந்து முன்னணியினர் ஏற்பாடுகளில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் வருகிற 2025 ஜூன் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்து முன்னணி சார்பில் பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில், தமிழகத்துடன் பிற மாநிலங்களிலிருந்தும் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர். காவடி, பால்குடம், தேர் இழுப்பு உள்ளிட்ட பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மாலை 6 மணிக்கு லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடுவதன் மூலம் கின்னஸ் சாதனை முயற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முருக பக்தர்கள் மாநாடு

அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைப்பு

மாநாட்டு வளாகத்தில், முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய கோயில்களின் மாதிரிகள் கோபுரங்கள், பிரகாரம், சன்னதி, சிற்ப அலங்காரங்கள் உள்ளிட்ட வடிவத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் அருள்மிகு முருக பெருமானின் சிலைகள் வேதமந்திரங்கள் முழங்க வழிபாடு செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் தரிசனம் செய்யலாம்

பொதுமக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம். இம்மாதிரி கோயில்கள் 2025 ஜூன் 22-ஆம் தேதி வரை தரிசனத்திற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகைக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டு, இந்து முன்னணியினர் நிர்வாகப் பொறுப்பேற்று செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனுடன், பக்தர்கள் திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்வுகள் நாள்தோறும் நடத்தப்படுகின்றன. இந்து ஆன்மிக விழாக்களில் இதுவொன்று மிகப்பெரிய திருவிழா வடிவம் பெற்றுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.