Lunar Eclipse: செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்.. 12 ராசிகளும் என்ன தானம் செய்யலாம்?
Astrology Remedies: செப்டம்பர் 7, 2025 அன்று ஏற்படும் சந்திர கிரகணத்தின் போது, 12 ராசிகளுக்கும் சிறப்பு பரிகாரங்கள் மற்றும் தானங்கள் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். இந்த தானங்கள் மன அழுத்தம் குறைப்பு, தொழில் வளர்ச்சி, உறவு மேம்பாடு போன்ற பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது.

சந்திர கிரகணம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுவதால் கிரகணமானது ஏற்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஏற்கனவே மார்ச் மாதம் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதனைத் தொடந்து இந்த வருடத்தின் சந்திர கிரகணம் ஆவணி மாதத்தின் பௌர்ணமி நாளான செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமான பித்ரு பக்ஷமும் அன்றில் இருந்து தொடங்குகிறது. இந்த கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 9:56 மணி முதல் அதிகாலை 1:26 மணி வரை இருக்கும். ஆனால் 80 நிமிடங்கள் முழுவதுமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் நன்றாக தெரியும் என கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கிரகணத்திற்குப் பிறகு ஒவ்வொரு ராசிக்காரர்களும் சில பொருட்களை தானம் செய்வது நன்மை பயக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
12 ராசிகளுக்குமான தான பரிகாரங்கள்
மேஷ ராசிக்காரர்கள் இந்த நாளில் சிவப்பு பயறு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உதவும் என சொல்லப்படுகிறது. அதேபோல் ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் தயிர் அல்லது அரிசியையும் தானம் செய்யலாம். இதனால் மன அழுத்தம் குறையும் அல்லது மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
இதையும் படிங்க: ஜோதிடத்தில் கிரக பிரச்னையா?.. பசுவிற்கு இந்த உணவு தானம் கொடுக்கலாம்!
மிதுன ராசிக்காரர்கள் பச்சை நிற ஆடைகள், பழங்கள் அல்லது பிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இது இந்த ராசியினரின் தொழில்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். கடக ராசிக்காரர்கள் சர்க்கரை கலந்த பால் தானம் செய்ய வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
சிம்ம ராசிக்காரர்கள் வெல்லம் தானம் செய்ய வேண்டும். இது உறவுகளை இனிமையாக்கி தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. கன்னி ராசிக்காரர்கள் பட்டாணி தானம் செய்ய வேண்டும். இது ஜாதகத்தில் புதனின் நிலையை வலுப்படுத்துகிறது. இதன் காரணமாக, வணிகம் மற்றும் தகவல் தொடர்புகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.மேலும் துலாம் ராசிக்காரர்கள் பால், அரிசி, நெய் தானம் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் போறீங்களா? கிரகணத்தன்று நடை அடைப்பு.. எப்போது தெரியுமா?
விருச்சிக ராசிக்காரர்கள் சிவப்பு நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பணமும் தானம் செய்யலாம். இது கிரக செல்வாக்கைக் குறைக்கிறது. மேலும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது. தனுசு ராசிக்காரர்கள் பருப்பு வகைகளை தானம் செய்ய வேண்டும். இது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.
மகர ராசிக்காரர்கள் கருப்பு எள்ளை தானம் செய்ய வேண்டும். இது ஜாதகத்தில் சனியின் நிலையை வலுப்படுத்தி, பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கும்ப ராசிக்காரர்கள் கருப்பு எள் மற்றும் எண்ணெய் தானம் செய்ய வேண்டும். இது அவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். மீன ராசிக்காரர்கள் மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும். இது நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உதவும்.