Lunar Eclipse 2025: செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்.. என்ன செய்யக்கூடாது தெரியுமா?
2025 செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு 9:59 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை உள்ளிட்ட முக்கிய தகவல்களை நாம் இந்த தொகுப்பில் காணலாம். சில நேரங்களில் கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் வானில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வாகும். அதேசமயம் ஜோதிடத்திலும் சந்திர கிரகணம் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வருகிறது அன்றைய நாளில் இரவு 9:59 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 3.23 மணிக்கு முடிவடைகிறது. இந்த முழு சந்திர கிரகணம் சுமார் 3 மணி 24 நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு சந்திர கிரகணம் என்பதால் இது ரத்த நிலவு என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.
சந்திர கிரகணம்
சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும்போது பூமி சூரியனின் ஒளியை முழுவதுமாக தடுத்து சந்திரன் மீது தன்நிலை படிய வைக்கும் நிகழ்வாகும். அதேசமயம் பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட சிவப்பு ஒளி நிலவின் மீது விழுவதால் சில நேரங்களில் கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. சில நேரங்களில் கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படும். அப்படியான நிலையில் சந்திர கிரகணம் நிகழும் போது நாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இதையும் படிங்க: கோயிலுக்கு சென்றால் தயவுசெய்து இதெல்லாம் செய்யாதீங்க!
இதெல்லாம் செய்யாதீங்க
பொதுவாக கிரகண நேரத்தில் அல்லது அந்த நாளில் எந்த ஒரு விஷயத்தையும் செய்வது குறைவு தான். காரணம் கிரகணம் நடைபெறுவதற்கு 9 மணி நேரம் முன்பதாக சூதக காலம் தொடங்குகிறது. இது எதிர்மறையான நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கிரகணத்தின் தாக்கம் தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் 12:59 மணி அளவில் இந்த சூதக காலம் தொடங்குகிறது. ஆக ஏதேனும் முக்கியமான வேலைகள் இருந்தால் அதனை 12 மணிக்குள் முடிக்கலாம்.
மேலும் கிரகண நேரத்தில் சமையல் செய்யக்கூடாது அல்லது சமைத்த உணவை சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக் கூடாது. விளக்கேற்றி வழிபடுவது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது, குளிப்பது போன்ற எந்த வேலையும் செய்யக்கூடாது. சிலருக்கு 9 மணி நேரம் முன்பாகவே அதன் தாக்கம் இருப்பதாக சொல்லப்படுவதால் அப்போதிருந்தே இதனை கடைபிடிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். அப்படி கிடையாது. கிரகணம் எப்போது தொடங்குகிறதோ அந்த நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலைகள் அனைத்தையும் முடித்து விட வேண்டும்.
இதையும் படிங்க: Vastu Tips: ப்ளீஸ்.. இரவில் இதெல்லாம் செய்யாதீங்க.. வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
கிரகணம் நிகழும் போது மற்றவர்களை காட்டிலும் கர்ப்பிணிகள் அதிகளவு பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. எனவே எக்காரணம் கொண்டும் இந்த நேரத்தில் வெளியில் செல்வது போன்ற திட்டங்களை மாற்ற வேண்டும். மேலும் கிரகணம் முடிந்த பிறகு வீட்டு வாயிலை நன்றாக கழுவி கோலமிட்டு விளக்கேற்றி வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள த்கவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ விளக்கம் கிடையாது. அதனால் டிவி9 தமிழ் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது)