Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையா? சரி செய்யும் குலதெய்வ வழிபாடு – எப்படி செய்ய வேண்டும்?

Kuladeivam Worship : குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் தவறாமல் கடைபிடிக்கும் ஒரு நடைமுறை. ஆனால் காலப்போக்கில் வாழ்கைமுறை மாற்றத்தால் நம் குல தெய்வ வழிபாட்டை தவிர்க்கிறோம். இதனால் குடும்பத்தில் சண்டைகள், தீராத பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையா? சரி செய்யும் குலதெய்வ வழிபாடு – எப்படி செய்ய வேண்டும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Nov 2025 21:27 PM IST

இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில் பலர் குடும்பத்தில் இடையூறு, சண்டை, மனஅமைதி இழப்பு, பொருளாதார சிக்கல்கள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இதற்கான முக்கியமான ஆன்மிக காரணங்களில் ஒன்று, குலதெய்வ வழிபாட்டை புறக்கணித்தல் என்று ஆன்மிக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். அந்த தெய்வமே அந்த குடும்பத்தின் ஆத்மிக பாதுகாவலர் ஆக கருதப்படுகிறார். அந்த தெய்வத்தை வழிபடுவது மூலம் குடும்பம் முழுவதும் நேர்மறை சக்தி பரவுகிறது. ஆனால் பலர் தங்களின் குலதெய்வம் யார் என்பதை அறியாமல் அல்லது புறக்கணித்து வாழ்கிறார்கள். இதுவே குடும்பத்தில் தொடர் பிரச்சனைகளுக்கு காரணமாக மாறுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குலதெய்வ வழிபாட்டை சரியான முறையில் செய்ய வேண்டும். வருடத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபடுவது, அங்கு நன்றி கூறுவது மிக அவசியம். இதனால் குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லாத விவாதங்கள், சண்டைகள், பொருளாதார தடைகள், மனஅமைதி குறைவு ஆகியவை நீங்கும் என்கின்றனர்.

இதையும் படிக்க : “தீராத கடன் பிரச்னை தீர வேண்டுமா?” இதோ எளிய வழிமுறைகள்!!

108 நாட்கள் குலதெய்வ வழிபாடு

குடும்பத்தில் தொடர் பிரச்னைகளை சரி செய்ய குல தெய்வத்தை 108 நாட்கள் தொடர்ந்து வழிபட வேண்டும் என்கின்றனர். குல தெய்வ கோவிலுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் தொடர்ந்து குல தெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து 108 நாட்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வர வேண்டும். இப்படி செய்து வர பிரச்னைகள் தீரும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

பலருக்கு திடீரென எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வீட்டில் அமைதி இல்லாமை, வேலையில் முன்னேற்றத்தில் தடை, உடல் நலம் குறைவு போன்றவை ஏற்படும். இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம், பித்ரு தோஷம் அல்லது குலதெய்வம் மறுப்பு என்று சொல்லலாம். அந்த குலதெய்வத்தை அடிக்கடி நினைத்து நன்றி கூறுவதால் அந்த சக்தி உங்களை காப்பாற்றும்.

இதையும் படிக்க : படுக்கையறையில் எதிர்மறை ஆற்றல்? நல்ல தூக்கத்திற்கான வாஸ்து குறிப்புகள்

குலதெய்வ வழிபாட்டை கைவிடாத முன்னோர்கள்

குலதெய்வ வழிபாடு என்பது வெறும் கோவிலுக்கு செல்வது அல்ல. அது குடும்ப உறவை மீண்டும் இணைக்கும் ஆன்மிகப் பாலம் எனலாம்.  குலதெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி நிலை பெறும். எந்த தடை வந்தாலும் அதை கடந்து செல்லும் ஆற்றல் கிடைக்கும். அதனால், நம் குலதெய்வத்தை மறக்காமல், ஆண்டுதோறும் அன்புடன் வழிபடுவோம் என ஆன்மிக குருக்கள் வலியுறுத்துகின்றனர்.

மொத்தத்தில், குலதெய்வ வழிபாடு என்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கை மட்டுமல்ல, அது குடும்ப நலன், ஆன்மிக அமைதி மற்றும் வளம் தரும் முக்கியமான வழிபாடு. இதனால் தான் நம் முன்னோர்கள் தங்கள் குல தெய்வ வழிபாடை கைவிடுவதில்லை என்கின்றனர்.