கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!

Karthigai month 2025: கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கே அதிக சிறப்பு கிடைக்கும். அதன்படி, தடைகளை அகற்றி வாழ்க்கையில் புதிய தொடக்கம் காணுவீர்கள். ஆற்றல், உறுதி, ஆரோக்கியம், பண வரவு, மன அமைதி அனைத்திலும் வளர்ச்சி பெறுவீர்கள். இது அவர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் மாதம் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!

கார்த்திகை மாதம்

Updated On: 

14 Nov 2025 16:54 PM

 IST

கார்த்திகை மாதம் (17 நவம்பர் 2025 – 15 டிசம்பர் 2025) சிவபெருமானின் அருள் நிறைந்த புனிதமான காலம். இந்த மாதத்தில் தீப்பந்தங்கள் ஏற்றி வழிபடுதல், உடல்–மனம் சுத்திகரித்துக்கொள்ளுதல், ஆன்மீக வளர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. அதோடு, இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், இந்த மாதத்தில் விருச்சிகம் ராசிக்கு மிகவும் சிறப்பாக அமையும்.

Also Read : வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களை வைத்திருக்கலாமா? வாஸ்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

விருச்சிக ராசிக்கு சிறப்பு பலன்:

கார்த்திகை மாதம் ஆண்டின் மிகவும் புனிதமான காலம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையும் சமயமே கார்த்திகை மாதம் துவங்குகிறது. இதனால், இந்த மாதம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு மிகப் பெரிய ஆன்மீக, நிதியியல், மனவலிமை மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் வழங்கும் காலமாக கருதப்படுகிறது. மற்ற ராசிகளைக் காட்டிலும், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் அற்புதமான பல மாற்றங்களையும், நன்மைகளையும் அனுபவிப்பார்கள்.

ஆன்மீக உள்ளுறுதி அதிகரிக்கும்:

கார்த்திகை மாதத்தில் அக்கினி தத்துவம் அதிகரிக்கும். அக்கினியுடன் நேரடி தொடர்பு கொண்ட தீப வழிபாடு, விருச்சிக ராசிக்காரர்களின் உள்ளார்ந்த சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது. இந்த காலத்தில், மனத்திறன் மேம்படும். தியானம் ஆழப்படும், சிந்தனை தெளிவாகும். சிவபெருமானின் “ஓம் நமசிவாய” மந்திரம் மிகவும் விசேஷ பலனுடன் செயல்படும்.

மறைமுக சக்திகள் விழிப்புணர்ச்சி பெறும்:

விருச்சிக ராசி ரகசிய சக்தி, மன ஆழம், மாற்றம் ஆகியவற்றின் பிரதிநிதியாதலால், இந்த மாதத்தில் அனுபவிக்கப்படும் மாற்றங்கள் சாதாரணம் அல்ல. கார்த்திகை மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய விழிப்புணர்ச்சி, உள்ளுணர்வு திறன் அதிகரிப்பு, எதிர்காலம் குறித்து தெளிவு,முடிவெடுக்கும் திறன் வளர்ச்சி இவற்றைத் தருகிறது.

பண வரவு மற்றும் வாழ்க்கை நிலை உயர்வு:

இந்த மாதத்தில் தடைப்பட்டு இருந்த பண விஷயங்களில் முன்னேற்றம், எதிர்பாராத வருமானம் அல்லது நன்மை. சேமிப்பு பழக்கம் மேம்பாடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளை தொடங்க சிறந்த காலம்.

கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களின், மனஅழுத்தம் குறையும்.நெருடல்கள் கட்டுப்படும், நீண்டநாள் வலி/அழுத்தங்கள் குறையும். இந்த மாதத்தில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது உடல் சக்தியை நிலைநிறுத்தும்.

Also read: ராஜ யோகம் 2025: துலாத்தில் சுக்கிரன் சூரியன் சேர்க்கை.. 5 ராசிக்கு அதிர்ஷ்ட பலன்கள்!

உறவு மற்றும் குடும்பத்தில் அமைதி:

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள் என்பதால் உறவுகளில் சில சமயம் பதட்டம் இருக்கும். கார்த்திகை மாதத்தில், தகராறு குறையும். உறவில் நெருக்கம் அதிகரிக்கும். பழைய விரிசல்கள் சரியாகும்.மனநிலையை சமநிலைப்படுத்தும் சக்தி கார்த்திகை மாதத்தில் அதிகம்.

தீப வழிபாடு மிகப் பெரிய பலன் தரும்:

எள் எண்ணெய் தீபம், நெய் தீபம்,சிவாலயத்தில் தீப அர்ச்சனை,செய்தால் விரைவான பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் கந்த சஷ்டி கவசம், சிவபுராணம், திருவாசகம் படிப்பது விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்நாளையே உயர்த்தும்.