AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கலைமகளின் அருள் பெற சரஸ்வதி பூஜையில் செய்ய வேண்டியவை என்ன?

Vijayadashami: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என்பது நம் அறிவையும் உழைப்பையும் உயர்த்திப் பிடிக்கும் உன்னதமான விழாவாகும். கல்வி, கலைகள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் கருவிகளை பூஜித்து நன்றி செலுத்துவது இதன் முதன்மை நோக்கமாகும். விஜயதசமி நாளில் புதிய தொடக்கங்களை மேற்கொள்வதும் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்குவதும் சகல நன்மைகளையும் தரும்.

கலைமகளின் அருள் பெற சரஸ்வதி பூஜையில் செய்ய வேண்டியவை என்ன?
சரஸ்வதி பூஜைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 08 Oct 2026 16:00 PM IST

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என்பது கல்வி, கலை மற்றும் தொழிலை போற்றி வணங்கும் பாரம்பரிய தமிழ் பண்டிகையாகும். அறிவுக்கும் ஞானத்திற்கும் அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபட்டு கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் புத்தகங்களையும் கலைப்பொருட்களையும் படைத்து வணங்குகின்றனர். மனித வாழ்வாதாரத்திற்கு உதவும் கருவிகள், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. பாண்டவர்கள் ஆயுதங்களை பூஜித்து வெற்றி பெற்ற புராண கதையும் மகிஷாசுர வதத்தின் போது அம்பாளுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்ட நிகழ்வும் இதன் பின்னணியாக உள்ளது. கருவிகளை சுத்தப்படுத்தி, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்து பொரி மற்றும் சுண்டல் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. தொழிலே தெய்வம் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்தி உழைப்பையும் உழைப்பாளிகளையும் கௌரவிக்கும் நன்னாளாக இது திகழ்கிறது.

கல்வியும் தொழிலும் செழிக்க ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்

நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாளில் ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவக்கூடிய கருவிகளையும், அறிவையும் ஆற்றலையும் வழங்கும் கலைமகளையும் போற்றி வணங்கும் அற்புத நாளாக இது அமைகிறது.

சரஸ்வதி பூஜையின் ஆன்மீகச் சிறப்பு

கல்வி, அறிவு, கலைகள் மற்றும் ஞானத்தின் அதிபதியாக விளங்கும் சரஸ்வதி தேவியைக் வழிபடும் நாளே சரஸ்வதி பூஜையாகும். இந்நாளில் மாணவர்கள் தங்களின் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் இசைக்கருவிகளை பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர். அறியாமை எனும் இருளை நீக்கி, மெய்ஞானத்தையும் கல்வியில் சிறந்து விளங்கும் ஆற்றலையும் அன்னை சரஸ்வதி அருள்கிறாள் என்பது நம்பிக்கை.

Also Read: நவராத்திரி ரகசியம்: 9 நாட்களுக்கு உரிய பூக்களும் நைவேத்தியங்களும்!

உழைப்பையும் கருவிகளையும் போற்றும் ஆயுத பூஜை

தொழில் வளர்ச்சிக்கும் தினசரி உழைப்பிற்கும் பயன்படும் இயந்திரங்கள், கருவிகள், வாகனங்கள் மற்றும் கணினிகள் போன்ற அனைத்துப் பொருட்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தாங்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில், கருவிகளைச் சுத்தப்படுத்தி பொட்டு வைத்து, மலர்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

புதிய தொடக்கத்திற்கான விஜயதசமி மற்றும் வித்யாரம்பம்

இப்பண்டிகையின் அடுத்த நாளான விஜயதசமி வெற்றிக்குரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் குழந்தைகளுக்கு நெல்லில் ‘ஹரி ஓம்’ என்று எழுதி கல்வியைத் தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வும், புதிய தொழில்களைத் தொடங்குவதும் பெரும் நன்மைகளையும் சகல ஐஸ்வரியங்களையும் தரும் என்பது ஐதீகம்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us