AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த நாட்களில் நகம் வெட்டாதீங்க.. நிதி பிரச்னை வரும்.. சாஸ்திரம் சொல்வது என்ன?

இந்து சாஸ்திரங்களின்படி, நகங்களை வெட்டுவதற்கு வாரத்தின் சில நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நகங்களை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் வெட்டுவது நல்லது. அதற்கான காரணங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்த நாட்களில் நகம் வெட்டாதீங்க.. நிதி பிரச்னை வரும்.. சாஸ்திரம் சொல்வது என்ன?
நகம் வெட்டுதல் தொடர்பான டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 29 May 2025 14:22 PM IST

வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு விஷயம் ஏன் செய்ய வேண்டும், ஏன் செய்யக்கூடாது, எப்படி செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஒரு செயல் இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதற்கான விதிகள் உள்ளது. அதற்காக தான் ஜோதிடம், கால நேரம், திசைகள் உள்ளிட்டவை பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்து மதத்தில் உள்ள சாஸ்திரங்களில் நகங்களை வெட்டுவதற்கு சில சிறப்பு விதிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நகம் வெட்டுதல் என்பது மிகவும் நல்ல, சுகாதாரத்தை பேணுவதற்கான பழக்கமாகும். இப்படியான நிலையில் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் சூரிய மறைவுக்குப் பின், சிறப்பு நாட்களிள் நகங்களை வெட்டக்கூடாது என சொல்வார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரிய அஸ்தமனத்திலோ அல்லது இரவிலோ நகங்களை வெட்டக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது. இது லட்சுமி தேவியை கோபப்படுத்தும் என்றும், வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் தீவிரமாக நம்பப்படுகிறது.அப்படியாக நாம் எந்த நாட்களில் நகங்களை வெட்டக்கூடாது.. எந்த நாட்களில் வெட்டுவது நல்லது என்பது பற்றிக் காணலாம்.

இந்த கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது

செவ்வாய்: சாஸ்திரத்தின்படி, செவ்வாய்க்கிழமை நகங்களை வெட்டுவது தடைசெய்யப்பட்ட நாளாகும். காரணம் இந்நாளில் நகங்களை வெட்டினால் கடன்கள் அதிகரிக்கும் மற்றும் நிதி நிலைமையை மோசமாக்கும் என்று ஐதீகமாக உள்ளது. குறிப்பாக அனுமனுக்குரிய நாளாக கருதப்படும் செவ்வாய் கிழமை ஆன்மிக ரீதியாக மங்களகரமான நாளாகும். எனவே இந்த நாளில் நகங்களை எக்காரணம் கொண்டும் வெட்டாதீர்கள்.

வியாழக்கிழமை: இந்த நாளில் நகங்களை வெட்டக்கூடாது என சொல்வதற்கு காரணம் திருமண உறவுகளில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுவதால் தான். இதனால் கணவன் மனைவி இடையேயான தூரம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

சனிக்கிழமை: சனிக்கிழமையானது ஜாதக ரீதியாக பார்த்தால் சனி பலன்களை கொடுக்கக்கூடியது. இந்நாளில் சனி கிரகம் பலவீனமாக இருப்பவர்கள் நகங்களை வெட்டுவதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகிறது. இதனால் நிதி இழப்பும் ஏற்படக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளாகும். அந்நாளில் தான் நாம் இதுபோன்ற செயல்களை மேற்கொள்வோம். ஆனால் இந்நாளில் நகங்களை வெட்டுவது வேலையில் தடைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையைக் குறையும். இது வெற்றியையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

இந்த நாள் நகம் வெட்டலாம்.. என்ன காரணம்?

திங்கட்கிழமை: ஜோதிடத்தில் திங்கட்கிழமை நகங்களை வெட்டுவது நல்லது என்று சொல்லப்படுகிறது. இதனால் அறியாமை மற்றும் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. திங்கட்கிழமை சிவன், சந்திரன் ஆகிய கிரகங்களுடன் தொடர்புடையது என சொல்லப்படுகிறது.]

புதன் : புதன்கிழமையில் நகங்களை வெட்டுவதற்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது நிதி நன்மைகளைத் தரும் என்றும், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் என்றும் நம்பப்படுகிறது. இது தொழிலில் வருமானத்தையும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை : வெள்ளிக்கிழமை நகங்களை வெட்டினால் லட்சுமி தேவியைப் பிரியப்படுத்துவதாகவும், வாழ்க்கையில் செல்வம், செழிப்பு மற்றும் அழகு ஆகியவற்றைப் பெருக்கும் என நம்பப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us