Diwali 2025: தீபாவளி பண்டிகை.. பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!
Diwali Vastu Tips: 2025 தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் வேளையில், லட்சுமி தேவியின் அருளைப் பெற வாஸ்து சாஸ்திர விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. உப்பு நீரில் வீடு துடைப்பது, கங்கை நீர்த் தெளிப்பது, சிவன் கோவிலுக்குச் செல்வது போன்ற பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி வாஸ்து டிப்ஸ்
நாடு முழுவதும் அக்டோபர் 20, 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை என்பதால் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள நடைமுறைகளும் மிக தீவிரமாக மக்களால் பின்பற்றப்படுகிறது. இப்படியான விசேஷ நாட்களில் வாஸ்து சாஸ்திரம் என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாகவே எல்லோரும் தங்கள் வீட்டில் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வாஸ்து விதிகளைப் புறக்கணிப்பவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது எனவும் நம்பப்படுகிறது. அதனால்தான் வாஸ்து விதிகளை கண்டிப்பாக மீறக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குறிப்பாக தீபாவளி நாளில், லட்சுமி தேவியை மகிழ்விக்க வாஸ்துவின் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
தீபாவளியின் போது, அனைவரும் தங்கள் வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்கிறார்கள். இருப்பினும், வீட்டை சுத்தம் செய்யும் பணியின் போது, உங்கள் வீட்டை உப்பு நீரில் துடைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ஐதீகமாக பார்க்கப்படுகிறது. உப்பு நீரில் வீட்டைத் துடைப்பது அனைத்து எதிர்மறை சக்தியையும் நீக்கி வீட்டில் நேர்மறையை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியின் 7 அறிகுறிகள் – எப்படி கண்டுபிடிப்பது?
வாஸ்து சாஸ்திர பிரகாரத்தின்படி, தீபாவளி நாளில் வீட்டை சுத்தம் செய்த பிறகு, கங்கை நீரில் குங்குமப்பூ, பச்சை பால் மற்றும் மஞ்சள் சேர்த்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இது நல்ல அதிர்ஷ்டத்தையும், லட்சுமி தேவியின் அருளையும் தரும் என்று பின்பற்றப்படுகிறது. இது நிதி சிக்கல்களைக் குறைத்து செல்வத்தை உறுதி செய்கிறது. இது தவிர, கடன் பிரச்னையும் நீங்கும் என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.
தீபாவளியன்று பலர் கோயில்களுக்குச் செல்வதில்லை. வீட்டில் பூஜை செய்கிறார்கள். ஆனால் தீபாவளியன்று சிவன் கோயில்களுக்குச் செல்வது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தீபாவளியன்று சிவன் கோயில்களுக்குச் சென்று விளக்கு ஏற்றுவது அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுடவும் இது உதவும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: கண்ணாடியை கொண்டு வாஸ்து தோஷம் நீக்கலாம்.. எப்படி தெரியுமா?
தீபாவளியன்று வீட்டை மா இலைகளாலும் பூக்களாலும் அலங்கரிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
(இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் யாவும் இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)