Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வேண்டுமா? – இந்த விஷயத்தை கைவிடுங்க!

சாணக்கிய நீதியின் படி, திருமண வாழ்வில் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும், பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டியவைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதன்படி பெண்களை மதிப்பது, மனைவிக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் அளிப்பது, மனைவியின் குடும்பத்திற்கு மரியாதை செலுத்துவது போன்றவற்றை அறிந்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வேண்டுமா? – இந்த விஷயத்தை கைவிடுங்க!
திருமண வாழ்க்கை
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 May 2025 17:49 PM

பொதுவாக இன்பம், துன்பம் நிறைந்த வாழ்க்கையில் நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என பல சாஸ்திரங்கள் வகுத்துள்ளது. அவற்றில் ஒன்று தான் சாணக்கிய நீதி. ஆச்சார்ய சாணக்கியர் எழுதிய இந்த நூலில் ஒருவர் தனது வாழ்க்கையில் சில விஷயங்களைப் பின்பற்றினால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சாணக்கியர் பல வழிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற பல நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருமணமான ஆண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி சாணக்கியர் சிறப்பு முக்கியத்துவம் அளித்து அறிவுரை வழங்கியுள்ளார். அதனைப் பற்றி நாம் காணலாம்.

பெண்களை மதிப்பது

பொதுவாக சமூகத்தில் வாழும் ஆண், பெண் என இருபாலருக்கும் சமமான உரிமை, உணர்வுகள் இருக்கிறது. அதனைப் புரிந்துக் கொள்ள வேண்டும். முதலில் பெண்களைப் பற்றிய மோசமான எண்ணங்கள் வைத்திருப்பதை கைவிடுங்கள். ஒருவரிடம் பழகாமல், அவரைப் பற்றி முழுதாக தெரியாமல் அவதூறாக பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சூழல் உள்ளது. அது பெண்களுக்கும் பொருந்தும். திருமணத்திற்குப் பிறகு உரிமை இருக்கிறது என்ற பெயரில் சிலர் மனைவியையும், அவர் வீட்டில் இருக்கும் பெண்களை கோபத்தில் அவதூறாக பேசுவார்கள். இவ்வாறு நீங்கள் இருப்பது உங்கள் மீதான மரியாதையை தான் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும் ஒரு தாய், சகோதரி என்ற அடிப்படையில் மதியுங்கள்.

மனைவிக்கு முடிவெடுக்கும் உரிமை

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு விட்டுக் கொடுத்துச் செல்லுதல் என்பது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு முக்கியம் ஒரு விஷயத்தில் மனைவிக்கு முடிவெடுக்கும் உரிமையை வழங்குவதாகும். திருமணம் என்பது சமமான உறவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் கணவன் மனைவி இருவருக்கும் சம உரிமை உண்டு. சமூகம் ஆண் தான் அனைத்து முடிவையும் இல்லறத்தில் எடுக்க வேண்டும் என பழக்கி வைத்திருக்கிறது. ஆனால் ஒருவர் தன் மனைவிக்கு சொந்தமாக முடிவுகளை எடுக்கும் உரிமையைக் கொடுத்து மதித்தால் கொண்டாடப்படுவீர்கள்.

மனைவியின் குடும்பம்

திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டுக்கு மனைவி வரும் நடைமுறை நம் சமூகத்தில் உள்ளது. சில இடங்களில் சில காரணங்களால் மாறுபடலாம். இருந்தாலும் உங்களை நம்பி வீட்டிற்கு வந்த அப்பெண்ணை கண் கலங்க வைக்காதீர்கள். சில ஆண்கள் தங்கள் மனைவியின் குடும்பத்திற்கு குறைவான மரியாதை கொடுப்பதை பார்த்திருக்கலாம். இது தவறானது. இரு குடும்பங்களுக்கும் இடையே இடைவெளியை உண்டாக்கும். ஒரு கணவன் தன் குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கும் மரியாதையைப் போலவே, தன் மனைவி குடும்பத்தினருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

திருமணத்தை மறைக்க வேண்டாம்

திருமணத்திற்குப் பிறகும் கூட சில ஆண்கள் தாங்கள் திருமணமானவர்கள் என்பதை மறைக்கவே விரும்புகிறதாக ஆய்வுகள் சொல்கிறது. இதைச் செய்வது மிகவும் தவறானதாகும். பெண்களுக்கு திருமணமானதற்கு தாலி, குங்குமம், மோதிரம் என பல அடையாளங்கள் உள்ளது. ஆனால் ஆண்களுக்கு அப்படி ஒரு அடையாளம் இல்லை. எனவே முன்வந்து தான் திருமணமானவர் என்பதை நேர்மையாகச் சொல்வதால் பல உறவு சிக்கல்கள் எழாமல் தடுக்கலாம்.

பொறுப்புடன் வாழுங்கள்

திருமணத்திற்குப் பிறகு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சில ஆண்கள் திருமணத்திற்கு முன்பு தங்கள் வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்பதைப் பற்றி மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அது நினைப்பதில் தவறில்லை. ஆனால் நடைமுறை என்ன என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் வாழ்வதற்குப் பதிலாக, நிகழ்காலத்தில் வாழ்ந்து தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினால் அவர்களால் பல பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும். குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்.

(சாணக்கிய நீதி சொல்லப்பட்டுள்ள குடும்ப வாழ்க்கை என்ற பிரிவின் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...