Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஞாயிற்றுக்கிழமை இந்த பொருட்களை ஒருபோதும் வாங்காதீர்கள்.. உங்கள் செல்வம் விலகிப் போகும்..

Never Buy These Items on Sunday: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானின் ஆட்சிநாள். சூரியன் என்பது ஆத்மபலன், பணவரவு மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. இந்நாளில் செய்யும் செயல்கள் சூரிய சக்தியை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும் என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Dec 2025 15:09 PM IST
இந்து மரபில், ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு  அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியனை வழிபடுவது வீட்டில் நல்ல சக்தி, வெற்றி, செழிப்பு மற்றும் மன நிம்மதியைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை சில குறிப்பிட்ட பொருட்களை வாங்குவது அபசகுனமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு தவறான வாங்குதல்கள்  சூரியதோஷத்தை ஏற்படுத்தி, பணநிலை, அமைதி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கலாம் என்று ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.

1 / 6
ஞாயிற்றுக்கிழமை இரும்பு அல்லது ஸ்டீல் பொருட்களை வாங்குவது நல்லதல்ல எனக் கருதப்படுகிறது. இது சனி தோஷத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், குடும்பத்தில் சச்சரவுகள், தடைகள், தேவையற்ற பிரச்சனைகள் மற்றும் பண இழப்புகள் ஏற்படலாம். மேலும், வாகனங்கள் (கார், பைக் போன்றவை) வாங்குவதையும் இந்த நாளில் தவிர்ப்பது சிறந்தது. இது போன்ற ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து, வேறு நல்ல நாளில் வாங்கலாம். வீடுகளில் பயன்படுத்தும், உப்பு வாங்குவது ஞாயிற்றுக்கிழமை அபசகுனமாகக் கருதப்படுகிறது. உப்பு ராகு மற்றும் சனி கிரகங்களுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இதனால் பொருளாதார இழப்புகள், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

2 / 6
ஞாயிற்றுக்கிழமை கருப்பு நிற செருப்புகள் அல்லது காலணிகள் வாங்குவது நல்லதல்ல. புனித நூல்களின் படி, இது எதிர்மறை சக்திகளை ஈர்க்கும். முக்கியமான வேலைகளில் தாமதம், தோல்வி அல்லது தடைகள் ஏற்படலாம். அவசியம் இருந்தால், வேறு நிறங்களில் வாங்கலாம் அல்லது வேறு நாளில் கருப்பு காலணிகளை வாங்குவது சிறந்தது. ஞாயிற்றுக்கிழமை துடைப்பம் வாங்குவது வீட்டின் செழிப்பை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இது வறுமையை அதிகரிக்கும் என்றும், வீட்டிலுள்ள நல்ல சக்தி குறையும் என்றும் கூறப்படுகிறது.

3 / 6
வீடு கட்ட பயன்படும் சிமெண்டு, செங்கல், இரும்பு போன்ற பொருட்களை ஞாயிற்றுக்கிழமை வாங்குவது சூரிய தோஷத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதனால் பணச்சிக்கல், குடும்ப அமைதியின்மை மற்றும் மனஅழுத்தம் ஏற்படலாம். மேலும், தோட்டத்திற்கு தேவையான, விதைகள், இயற்கை உரம், தோட்ட உபகரணங்களை ஞாயிற்றுக்கிழமை வாங்குவது மகாலட்சுமி தேவியைப் புண்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால் பணவரவு குறையலாம் மற்றும் செழிப்பு தடைபடலாம்.

4 / 6
கண் கண்ணாடி போன்ற கண் சம்பந்தமான பொருட்களை ஞாயிற்றுக்கிழமை வாங்குவது நல்லதாகக் கருதப்படுகிறது. இது கண் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் குறிக்கிறது. சமையலறையில் பயன்படுத்தப்படும் கோதுமை மற்றும் செம்பு இரண்டும் சூரியனுடன் தொடர்புடையவை. இவற்றை ஞாயிற்றுக்கிழமை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை சக்தியையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

5 / 6
சிவப்பு நிறம் சக்தி, உற்சாகம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிற ஆடைகள் அல்லது பொருட்களை வாங்குவது வீட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும். ஞாயிற்றுக்கிழமை புதிய பணப்பை வாங்குவது பணநிலைத்தன்மையை அதிகரிக்கும் என்றும், செல்வத்தின் ஓட்டத்தை மேம்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைகள் பாரம்பரிய ஜோதிடக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை. நம்பிக்கை மற்றும் நடைமுறையை சமநிலையுடன் பின்பற்றினால், மனநிம்மதியும் வாழ்வில் நேர்மறை மாற்றங்களும் கிடைக்கும் என்பது பொதுவான கருத்தாகும்.

6 / 6