கடக ராசியில் சூரிய பகவான்.. இந்த 3 ராசிக்கு இனிமேல் நல்ல காலம்!
2025 ஜூலை 16 அன்று சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. இதில் கடக ராசி அதிபதியான சந்திரனுடன் தொடர்புடையது. இந்தப் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரமே நவக்கிரகங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. 9 கிரகங்கள் இருந்தாலும் இவற்றில் ராஜாவாக திகழ்வது சூரிய பகவான் தான். 12 ராசிகளில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் 30 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை சூரியன் மாற்றுகிறார். சூரியனின் ராசி மாற்றம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்கிறது. சூரியன் ஒரு ராசியை விட்டு வெளியேறி மற்றொரு ராசியில் நுழைவது சூரிய கோச்சாரம் அல்லது பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஜூலை மாதத்தில், சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்து சஞ்சரிக்க உள்ளார், சூரியனின் மாற்றத்தால், இந்த நாள் ஆடி மாத பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த சூரியப் பெயர்ச்சியானது ஜூலை 16 புதன்கிழமை நடைபெறுகிறது.
அந்த கிரகம் இடம் பெயரும் கடக ராசியின் அதிபதியாக சந்திரன் திகழ்கிறார். அந்த வகையில் இன்று முதல் 30 நாட்கள் சூரியன் கடக ராசியில் தான் இருப்பார். கடகம் என்பது மனம், உணர்ச்சிகள் மற்றும் அமைதியின்மைக்கு காரணமான சந்திரனுடன் தொடர்புடையது. அதனால்தான் சந்திர ராசியில் சூரியப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, சில ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
சூரிய பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்
கடகம்: சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிக அற்புதமான நல்ல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில், ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தையுடனான உறவுகள் மேம்படும். நீங்கள் தொடங்கும் எந்த வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். ஊழியர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் அந்தஸ்து, கௌரவம் மற்றும் மரியாதை அதிகரிக்கும். வருமானம் உயரும். இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்ல நேரமாக கருதப்படுகிறது. இதனால் பல நன்மைகள் ஏற்படப்போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் நிதி ரீதியிலான நன்மைகளைப் பெறலாம். ராசிக்காரர்கள் பேசும் பேச்சுகள் எதிர் தரப்பினரை உற்சாகப்படுத்தும். இதனால் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது. வருமானம் ஈட்டும் முயற்சியில் எல்லா வழிகளிலும் பயனடைவீர்கள்.
விருச்சிகம்: இந்த ஒருமாத காலம் இவர்களுக்கு நல்ல நேரமாகும். இந்த நேரத்தில், தொலை தூரம் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதனால் பல நன்மைகள் உண்டாகும். எந்த வேலையைத் தொடங்கினாலும் அது நிச்சயம் நிறைவேறும். கல்வி மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.
(ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் உள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)