Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்… பக்தர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்.!

Nellai 518th Aani Festival: திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் 518-வது ஆனிப் பெருந்திருவிழா 2025 ஜூன் 30 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2025 ஜூலை 8 அன்று நடைபெற உள்ள தேரோட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்… பக்தர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்.!
நெல்லையப்பர் கோவில் Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 04 Jul 2025 10:20 AM

திருநெல்வேலி ஜூலை 04: திருநெல்வேலியில் (Tirunelveli) நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் (Nellaiappar – Goddess Gandhimati) கோவிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா (518th Anib Festival) 2025 ஜூன் 30 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 2025 ஜூலை 8 அன்று நடைபெறுகிறது. 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 1500 போலீசார், 147 கேமராக்கள், டிரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரத வீதிகளில் பீப்பி சத்தம், ஜாதி அடையாளங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது. புதிய வடம் ரூ.6.5 லட்சத்தில் தயாராகி தேரோட்டத்துக்கு தயாரிப்புகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

518-வது ஆனிப் பெருந்திருவிழா

திருநெல்வேலி நகரின் புகழ்பெற்ற நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோவிலில் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, 2025 ஜூன் 30ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறப்புடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு வேத மந்திர ஒலிகளுடன் கொடியேற்றம் நடந்தது. மகா தீபாராதனையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஜூலை 8ஆம் தேதி நாளை தேரோட்டம்

இந்த விழா 10 நாட்கள் நடைபெறவிருக்கின்றது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி மற்றும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருவார்கள். கோவிலின் கலையரங்கத்தில் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, கர்நாடக இசை நிகழ்ச்சிகள், புராண நாடகங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, 2025 ஜூலை 8ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆசியாவின் மிகப்பெரிய தேராகக் கருதப்படும் நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்கள் வீதிகளில் பவனி வரும். இதில் பங்கேற்க 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தேரை இழுப்பதற்காக கடந்த ஆண்டு ஏற்பட்ட தடைகளை தவிர்க்க, ரூ.6.5 லட்சம் செலவில் 1,300 அடி நீளமுள்ள புதிய வடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு 1500 போலீசார் ஈடுபாடு

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, நெல்லை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ரத வீதிகளில் மட்டும் 800 போலீசாரும், 22 நுழைவிடங்களில் தீவிர சோதனை நடவடிக்கைக்கும் 1500 போலீசாரும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், 147 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன் கேமரா உதவியுடன் விழா முழுவதும் கண்காணிப்பு செய்யப்படும்.

பீப்பி சத்தம், ஜாதி அடையாளங்கள் மற்றும் கேஷங்கள் பயன்படுத்துவதற்கும் கடுமையான தடையும், அவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முன்னுரிமையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு நகரில் உற்சாகமும், பக்தி பரவலுமாகவும் காணப்படுகிறது.