AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புனித வெள்ளி என்றால் என்ன?.. இயேசுவின் துன்பமும்.. சிலுவை மரணத்தின் பின்னணியும்..

Good Friday 2026: இயேசு கிறிஸ்து மரணமடைந்த அந்தத் துக்கமான வெள்ளி, மனித குலத்தின் மீட்புக்காக அவர் செய்த தியாகத்தின் காரணமாக 'புனித வெள்ளி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு கிறித்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் இருந்து விரதங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Apr 2026 14:58 PM IST
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் கடைப்பிடிக்கப்படும் 'புனித வெள்ளி' (Good Friday), இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் அவர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வையும் நினைவுறுத்தும் நாளாகும். இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் பிறந்தபோது வானத்தில் தோன்றிய நட்சத்திரம் மற்றும் தேவதூதர்களின் வருகை பற்றி நாம் அறிவோம். அவர் தனது வாழ்நாளில் அன்பையும், மன்னிப்பையும் மட்டுமே போதித்தார். நோயாளிகளைக் குணப்படுத்துவது போன்ற பல அற்புதங்களைச் செய்த அவரைப் பின்தொடர்ந்து சீடர்கள் உருவானார்கள். இருப்பினும், அவரது புரட்சிகரமான கருத்துக்களை ஏற்காதவர்கள் அவர் மீது வீண் பழி சுமத்தி, அவரைத் தண்டிக்க அரசாங்கத்தை வற்புறுத்தினர்.

1 / 5
இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாஸ், வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காகத் தனது குருவைக் காட்டிக்கொடுத்தான். இயேசு இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பே, "உன்னுடைய நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன" என்று யூதாஸ் கூறியபோது, இயேசு மிகவும் அமைதியாக, "நான் எனது காலடிகளை அளந்து வைக்கிறேன்" என்று பதிலளித்தார். இந்தக் கவித்துவமான பதில் அவரது மரணத்தை அவர் முன்கூட்டியே அறிந்திருந்ததை உணர்த்துகிறது. கைது செய்யப்பட்ட இயேசுவைத் தலைமை அர்ச்சகர்களிடமும், பின்னர் ரோமானிய ஆளுநர் பிலாத்துவிடமும் அழைத்துச் சென்றனர். பிலாத்துவுக்கு இயேசுவிடம் எந்தக் குற்றமும் காணப்படவில்லை.

2 / 5
அவர் இயேசுவை ஏரோது மன்னனிடம் அனுப்பினார். மீண்டும் பிலாத்துவிடமே அவர் கொண்டு வரப்பட்டபோது, மக்கள் "இவரைச் சிலுவையில் அறையும்" என்று கூச்சலிட்டனர். மக்களின் வற்புறுத்தலுக்குப் பணிந்த பிலாத்து, "இந்த மரணத்தில் எனக்குப் பங்கில்லை" என்று கூறித் தனது கைகளைக் கழுவிக் கொண்டார். இயேசுவுக்குச் செந்நிற ஆடை உடுத்தப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டது. 'யூதர்களின் அரசன்' என்று அவரைச் சுற்றியிருந்தவர்கள் கேலி செய்தனர். பாரமான சிலுவையைத் தனது தோளில் சுமந்து கொண்டு, கசையடிகளைப் பெற்றுக்கொண்டு கல்வாரி மலையை நோக்கி இயேசு நடந்தார். அந்தப் பாதையில் அவரது தாயாரும் மற்றவர்களும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே பின் தொடர்ந்தனர். மலையின் உச்சியில், இரண்டு திருடர்களுக்கு நடுவே இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

3 / 5
சிலுவையில் தொங்கியபோது இயேசு மகா மேன்மையான ஒரு காரியத்தைச் செய்தார். தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக, "பிதாவே இவர்களை மன்னியும், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் செய்கிறார்கள்" என்று வேண்டினார். மதியம் மூன்று மணி அளவில், "ஏலோனி ஏலோனி லேமா சவக்தானி" (என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?) என்று கூறித் தனது உயிரைத் துறந்தார். அவர் உயிர் பிரிந்த தருணத்தில் சூரிய ஒளி மறைந்து, பலத்த காற்று வீசியது; தேவாலயத்தின் திரை கிழிந்து விழுந்தது என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

4 / 5
இந்தத் துக்கமான வெள்ளிக்கிழமைக்குப் பிறகு, மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது கிறித்தவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த உயிர்த்தெழுதலை 'ஈஸ்டர்' என்று கொண்டாடுகின்றனர். புனித வெள்ளி அன்று தேவாலயங்களில் கொண்டாட்டங்கள் இருக்காது, மாறாகத் தியானமும் வழிபாடும் மட்டுமே நடைபெறும். முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த ஒரு மனிதரின் அன்பு இன்றும் ஊற்று போல உலகெங்கும் பாய்ந்து கொண்டிருக்கிறது என்றால், அது அவர் காட்டிய தன்னலமற்ற தியாகமே காரணம்.

5 / 5
Follow Us