குடியரசு தின பேரணியில் புதிய அம்சங்கள்: ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் அமைப்பு, பைரவ் படை, பாக்ட்ரியன் ஒட்டகங்கள்
ஆழமான தாக்குதல் திறன் கொண்ட ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் ஏவுகணை அமைப்பு, புதிதாக உருவாக்கப்பட்ட பைரவ் லைட் கமாண்டோ படைப்பிரிவு, மேலும் ஜான்ஸ்கர் குதிரைகள் மற்றும் பாக்ட்ரியன் ஒட்டகங்கள் ஆகியவை இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக இடம்பெறவுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23, 2026) தெரிவித்தனர். முதன்முறையாக, 61வது குதிரைப் படை (61 Cavalry) உறுப்பினர்கள் போர்க்கள உடையுடன் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். அதேபோல், வீரர்களுடன் இணைந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய ராணுவ உபகரணங்கள், “கட்டப் படி போர்க்கள அணிவகுப்பு (Phased Battle Array Formation)” வடிவில் கர்த்தவ்ய பாதை வழியாக நகரும்.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6