AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாம்பழங்களை இப்படி சேமிப்பவரா நீங்க? இனிமேல் இந்த தப்பு பண்ணாதீங்க!

Ultimate Guide to Storing Mangoes: மாம்பழங்களை வாங்கியவுடன் காற்றோட்டம் இல்லாத பிளாஸ்டிக் பைகளில் வைப்பதைத் தவிர்த்து, நன்கு பழுக்கும் வரை அறை வெப்பநிலையில் வைப்பதே அதன் சுவையைத் தக்கவைக்கும். காயாக இருக்கும் மாம்பழங்களை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. நீண்ட நாட்கள் மாம்பழங்களைப் பாதுகாக்க விரும்பினால், அவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டி காற்று புகாத டப்பாக்களில் அடைத்து ப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்தலாம்.

மாம்பழங்களை இப்படி சேமிப்பவரா நீங்க? இனிமேல் இந்த தப்பு பண்ணாதீங்க!
மாம்பழ சேமிப்பு முறைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 May 2026 13:50 PM IST

கோடை காலம் வந்துவிட்டாலே அனைவரின் வீடுகளிலும் மாம்பழங்கள் ஆக்கிரமித்திருக்கும். ஆனால், கடைகளில் இருந்து வாங்கி வரும் மாம்பழங்களை நாம் அப்படியே பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது காற்றோட்டம் இல்லாத இடங்களிலோ வைத்து விடுகிறோம். இதனால் மாம்பழங்கள் மிக விரைவில் அழுகி விடுவதுடன், அதன் இயற்கையான சுவையையும் இழக்கின்றன. குறிப்பாக, மாம்பழங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும்போது ஏற்படும் வெப்பம், பழங்களை சீக்கிரம் கெட்டுப்போகச் செய்கிறது.

பிரிட்ஜில் வைப்பதில் கவனிக்க வேண்டியவை

பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு, காயாக இருக்கும் மாம்பழங்களை பிரிட்ஜில் வைப்பதுதான். மாம்பழம் முழுமையாக பழுப்பதற்கு முன்பு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அதன் பழுக்கும் தன்மை பாதிக்கப்பட்டு சுவை குறைந்துவிடும். மாம்பழம் நன்றாக பழுத்த பிறகு மட்டுமே அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அதுவும் ஒரு வாரம் வரை மட்டுமே அதன் தரம் மாறாமல் இருக்கும். பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் காகிதப் பைகளில் சுற்றி வைப்பது பழத்திற்குத் தேவையான காற்றோட்டத்தை வழங்கும்.

பாரம்பரிய முறையில் மாம்பழத்தை பாதுகாத்தல்

மாம்பழங்களை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க நமது முன்னோர்கள் ஒரு சிறந்த முறையைப் பின்பற்றினார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி அல்லது கோதுமையை நிரப்பி, அதனுள் மாம்பழங்களை புதைத்து வைப்பதன் மூலம் அவை இயற்கையாக பழுப்பதோடு, நீண்ட நாட்கள் வாடாமலும் இருக்கும். தானியங்கள் மாம்பழத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, சீரான வெப்பநிலையை பராமரிக்க உதவுகின்றன. மேலும், மாம்பழங்களை வைக்கும் முன் அவற்றைச் சுத்தமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் உலர்த்திய பிறகு சேமிப்பது நல்லது.

Also Read: சுவையான எலுமிச்சை சாதம்: நாவில் சுவையூறும் எளிய செய்முறை ரகசியம்!

நீண்ட கால பயன்பாட்டிற்கு உறைநிலை முறை

மாம்பழ சீசன் முடிந்த பிறகும் அதன் சுவையை அனுபவிக்க விரும்புவோர், மாம்பழங்களைச் சிறு துண்டுகளாக வெட்டி காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து ‘ப்ரீஸரில்’ (Freezer) வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பல மாதங்கள் வரை மாம்பழத்தின் சுவை மாறாமல் இருக்கும். மேலும், மாம்பழக் கூழ் (Pulp) தயாரித்தும் பதப்படுத்தலாம். ஆனால், எந்த ஒரு முறையைப் பின்பற்றும் முன்பும் அழுகிய அல்லது அடிபட்ட மாம்பழங்களை மற்ற பழங்களில் இருந்து பிரித்துவிடுவது அவசியம், இல்லையெனில் மற்ற பழங்களும் விரைவாகப் பாதிக்கப்படும்.

 

Follow Us