Propose Day 2026: ப்ரொபோஸ் டே எப்போது கொண்டாடப்படுகிறது? காதலர் வாரத்தில் இந்த நாள் ஏன் முக்கியம்?

Propose Day 2026 History: ப்ரொபோஸ் டே கொண்டாடுவதற்கு உங்களுக்கு அதிக பணம் இருக்க வேண்டும் அவசியம் இல்லை. பரிசுகள் தேவையில்லை, ஆரவாரம் தேவையில்லை, ஒருவருக்கான உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதுமானது. உங்கள் எதிர்பாலினத்தினருக்கு காதலை சொல்ல கொஞ்சம் தைரியம் இருந்தால் அது ஒரு அழகான உறவுக்கு வழிவகுக்கும்.

Propose Day 2026: ப்ரொபோஸ் டே எப்போது கொண்டாடப்படுகிறது? காதலர் வாரத்தில் இந்த நாள் ஏன் முக்கியம்?

ப்ரொபோஸ் டே

Published: 

08 Feb 2026 08:08 AM

 IST

காதலர் வாரம் (Valentine Week) ஒவ்வொரு ஆண்டும்  பிப்ரவரி 7ம் தேதி ரோஜா தினத்துடன் தொடங்குகிறது. காதலர்களுக்கான காதல் திருவிழாவாக பார்க்கப்படும் இந்த வாரத்தில், பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்துடன் (Valentine Day) முடிவடைகிறது. இந்த காதலர் வாரத்தின் 2வது நாளில் காதல் கொண்டவர்கள் தங்கள் அன்பு கொண்டவர்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில், முன்மொழிதல் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது உறவுகளை வலுப்படுத்தி அவர்களை ஒரு படி முன்னேறச் செய்கிறது. ஒருவரை நேசித்தாலும் அதை இன்னும் வெளிப்படுத்த முடியாதவர்களுக்கு இந்த நாள் இன்னும் சிறப்பு வாய்ந்தது. காதலர் தினம் மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது, மேலும் இந்த வாரம் முழுவதும், இதில் ரோஜா தினம், ப்ரொபோஸ் டே, சாக்லேட் தினம், டெடி தினம், கட்டிப்பிடிப்பு தினம், முத்த தினம் மற்றும் காதலர் தினம் ஆகியவை அடங்கும், இது தொடர்புடையது.

ALSO READ: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?

ப்ரொபோஸ் டே, பெயர் குறிப்பிடுவது போல, உங்கள் இதயத்தின் உணர்வுகளை ஒருவரிடம் வெளிப்படுத்துவதாகும். ப்ரொபோஸ் டே அன்று, உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு மிகவும் பிடித்த அன்பு கொண்டவர்களிடம் அது நட்பா? காதலா என்று தெரியாமல் தவிர்த்தால் இன்றைய நாளில் நீங்கள் ப்ரொபோஸ் செய்யலாம். அதன்படி, இது நல்ல நினைவை தரும் சிறந்த வாய்ந்த தருணமாக இருக்கலாம். அதேபோல், நீங்கள் ஒருவரை திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தாலும், பிப்ரவரி 8 ஆம் தேதி ப்ரொபோஸ் செய்யலாம். அந்தவகையில், ப்ரொபோஸ் டே பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ப்ரொபோஸ் டே வரலாறு இருக்கிறதா?

ப்ரொபோஸ் டே உருவானதற்கு அதிகாரப்பூர்வ வரலாறு எதுவும் இல்லை என்றாலும், 1477ம் ஆண்டு பர்கண்டியைச் சேர்ந்த மேரிக்கு ஆஸ்திரியாவின் ஆர்ச்டியூக் மாக்சிமிலியன் வைர மோதிரம் கொடுத்து திருமண ரொபோஸ் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிச்சயதார்த்த மோதிர சடங்கு பிரபலமடைந்ததாகவும், காலப்போக்கில், காதலை வெளிப்படுத்த அல்லது உறவில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்க ஒரு மோதிரத்தை வைத்து திருமண மற்றும் காதல் ப்ரொபோஸ் செய்வது ஒரு பாரம்பரியமாக மாறியது. இந்த பாரம்பரியம் இன்றைய காலம் வரை தொடர்கிறது.

ALSO READ: காதலர் வாரம் ஏன் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது..? அதன் வரலாறும், முக்கியத்துவமும்..!

ஒவ்வொரு காதலருக்கும் சிறப்பு வாய்ந்த நாள்:

ப்ரொபோஸ் டே கொண்டாடுவதற்கு உங்களுக்கு அதிக பணம் இருக்க வேண்டும் அவசியம் இல்லை. பரிசுகள் தேவையில்லை, ஆரவாரம் தேவையில்லை, ஒருவருக்கான உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதுமானது. உங்கள் எதிர்பாலினத்தினருக்கு காதலை சொல்ல கொஞ்சம் தைரியம் இருந்தால் அது ஒரு அழகான உறவுக்கு வழிவகுக்கும். இந்த நாளில் உங்கள் துணையை அவர்களுக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று உங்கள் அன்பையும் அக்கறையையும் வெளிகாட்டலாம். நீங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்ல இந்த ப்ரொபோஸ் டே ஒரு சிறந்த நாளாக அமையும்.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்