AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Acceptance: மாற்றத்தை ஏற்காமல் ஏன் நாம் வேதனைப்படுகிறோம்?

Life Lessons on Change: மாற்றத்தை ஏற்காததே வேதனைக்கு காரணம். கடந்ததை விடுவது வாழ்க்கையை எளிதாக்கும். நல்ல எண்ணங்கள் மகிழ்ச்சியை தரும். துன்பம், தவறு, பிரிவு அனைத்தும் வாழ்க்கை பாடங்களே. சில பிரிவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால் அதில் வருத்தம் வேண்டாம். மனித உறவுகளிலும் அன்பிலும் வரும் வலி வாழ்க்கையின் உண்மையை உணர்த்துகிறது.

Acceptance: மாற்றத்தை ஏற்காமல் ஏன் நாம் வேதனைப்படுகிறோம்?
மாற்றத்தை ஏற்காததே வேதனைக்கு காரணம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 31 Mar 2026 11:00 AM IST

வாழ்க்கையில் மாற்றம் இயல்பு, அதனை எதிர்ப்பதே வேதனையை உருவாக்குகிறது. கடந்ததை நினைத்து வருந்தாமல் முன்னேறுவது முக்கியம். நல்ல எண்ணங்கள் மனதில் இருந்தால் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். துன்பங்களை கடந்தவர்கள் தான் உண்மையான சந்தோஷத்தின் அர்த்தத்தை புரிந்துகொள்கிறார்கள். நாம் செய்யும் தவறுகள் நமக்கு பாடமாக மாறுகின்றன. சில பிரிவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால் அதில் வருத்தம் வேண்டாம். மனித உறவுகளிலும் அன்பிலும் வரும் வலி வாழ்க்கையின் உண்மையை உணர்த்துகிறது.

மாற்றத்தின் உண்மை

மாற்றம் ஒருபோதும் வேதனையானது அல்ல, மாற்றத்திற்கான உங்கள் எதிர்ப்பு மட்டுமே வேதனையானது…! வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவை. ஆனால் அந்த மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது தான் மனவேதனை அதிகரிக்கிறது. உண்மையில் மாற்றம் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பு என்பதை புரிந்துகொள்ளும் போது வாழ்க்கை எளிதாக மாறுகிறது.

கடந்ததை விடுவது முக்கியம்

கடந்து போனதை நினைத்து கவலை வேண்டாம்…….!! கவலை வேண்டாம் என்பதற்காகதான் அது கடந்து போனது………!! கடந்த நிகழ்வுகளை நினைத்து வருந்துவது நமக்கு எந்த பயனையும் தராது. அதற்கு பதிலாக எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவது தான் வாழ்க்கையின் சரியான அணுகுமுறை.

நல்ல எண்ணங்கள் – மகிழ்ச்சியின் மூல காரணம்

நல்லதை மட்டும் நினைக்கும் மனதில், மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். மனிதன் தனது சிந்தனைகளை கட்டுப்படுத்தினால், அவன் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறும். நல்ல எண்ணங்கள் மன அமைதியையும், நம்பிக்கையையும் வளர்க்கும்.

துன்பம் கற்றுக் கொடுக்கும் பாடம்

ஒவ்வொரு மகிழ்ச்சியும் வரம் என்பது, துன்பங்களை கடந்து வந்தவர்களுக்கே தெரியும். வாழ்க்கையில் சிரமங்களை சந்தித்தவர்கள் தான் உண்மையான மகிழ்ச்சியின் மதிப்பை புரிந்துகொள்கிறார்கள். துன்பங்கள் மனிதனை பலமாக மாற்றுகின்றன.

தவறுகளின் விளைவு

நாம் செய்யும் ஒவ்வொரு தவறும், நம்மை ஒரு நாள் வருந்த வைக்கும்….!!! தவறுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவை நமக்கு பாடம் கற்றுத்தருகின்றன. அந்த அனுபவங்கள் எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றன.

பிரிவின் உண்மை

உங்களை விட்டுச் செல்லும் அனைத்திற்கும் அதற்கான நேரம் வந்து விட்டது அவ்வளவுதான் இங்கே வருத்தப்பட ஒன்றுமில்லை….!!! வாழ்க்கையில் சிலர் நம்மை விட்டு பிரிவது இயல்பு. அது ஒரு முடிவு அல்ல, புதிய ஆரம்பத்திற்கான ஒரு அறிகுறி.

மனித உறவுகளின் சவால்

நமது வாழ்க்கையில் நாம் வாழ்வதை விட, சிலருடன் போராடுவதே மிகச் சிரமமாக இருக்கிறது. மனித உறவுகள் எளிதானவை அல்ல. சில நேரங்களில் புரிதல் இல்லாததால் மன அழுத்தம் உருவாகிறது.

Also Read: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை? மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

அன்பின் வலி

உலகில் அதிகம் காயப்படுபவர்களும்…, அதிகம் ஏமாற்றப்படுபவர்களும்…, அன்பானவர்களாகத்தான் இருப்பார்கள்….!!! அதிக அன்பு கொண்டவர்கள் தான் அதிகமாக காயப்படுவார்கள். ஆனால் அதுவே அவர்களின் மனிதநேயத்தையும் காட்டுகிறது.

வாழ்க்கையின் உண்மையான முகம்

“பலரின் உண்மையான முகத்தை அறிந்த பிறகும் நாம் சிரித்தபடி அவர்களைச் சந்திக்கிறோமே “அதுதான் வாழ்க்கை”…!!!!! வாழ்க்கை என்பது உண்மைகளை அறிந்தபோதும் அமைதியாக முன்னேறுவது தான். அது தான் மனவலிமையின் அடையாளமாகும்.

Follow Us