Skin Care: இளம் வயதிலேயே முக சுருக்கமா..? இவை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

Prevent Wrinkles Naturally: வயதுக்கு ஏற்ப சுருக்கங்கள் தோன்றும். இருப்பினும், இவை வயதை மட்டுமல்ல, சில காரணிகளையும் சார்ந்து உங்கள் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும். சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் முகத்தின் முன்கூட்டிய வயதை ஏற்படுத்தும். எனவே, ஒருவர் சில வழக்கமான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

Skin Care: இளம் வயதிலேயே முக சுருக்கமா..? இவை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

முக சுருக்கம்

Published: 

09 Oct 2025 16:15 PM

 IST

எல்லோரும் தங்கள் முகம் (Skin Care) எப்போதும் புத்துணர்ச்சியுடனும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது தவறல்ல. சருமம் எப்போதும் இயற்கையாகவே பளபளப்பாக இருந்தால் நன்றாகதான் இருக்கும். ஆண்களை விட பெண்கள் இந்த வித்தியாசத்தில் சற்று அதிகமாகவே கவனம் செலுத்துவார்கள். அதனால்தான் கடைகள் மற்றும் ஆன்லைன்களில் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இது சில நேரங்களில் பெரியளவில் பலனை தராது. அந்தவகையில், இவற்றை தவிர்த்து சில வீட்டு குறிப்புகளையும் சிலர் பின்பற்ற முயற்சி செய்கிறார்கள். இவற்றைப் பின்பற்றினாலும், சில நேரங்களில் சருமம் சுருக்கங்கள் (Wrinkles) ஏற்பட்டு, வறண்டு போகிறது. அந்தவகையில், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

பொதுவாக, வயதுக்கு ஏற்ப சுருக்கங்கள் தோன்றும். இருப்பினும், இவை வயதை மட்டுமல்ல, சில காரணிகளையும் சார்ந்து உங்கள் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும். சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் முகத்தின் முன்கூட்டிய வயதை ஏற்படுத்தும். எனவே, ஒருவர் சில வழக்கமான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், எத்தனை பொருட்களைப் பயன்படுத்தினாலும், பலன் தராது. இந்தநிலையில், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பளபளப்பான சருமம் வேண்டுமா..? வைட்டமின் ஈ வழங்கும் 5 காய்கறி உணவுகள்..!

மன அழுத்தம்:

மன அழுத்தம் மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை மட்டுமல்ல, அழகு ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியான மன அழுத்தம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். பதட்டம் மற்றும் அதிகமாக சிந்திப்பது உடலில் கார்டிசோல் ஹார்மோனை அதிகரிக்கிறது. இது சருமத்தில் ஈரப்பதத்தை குறைத்து, சுருக்கங்கள் தோன்றும். இதனால் முகம் சோர்வாகத் தெரிகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க, நீங்கள் சரியான நேரத்தில் ஓய்வெடுப்பது முக்கியம். மேலும், மன அழுத்தத்தை குறைக்க நல்ல இசை, தியானம் செய்ய வேண்டும். இது நல்ல பலனைத் தரும்.

கோபம்:

மீண்டும் மீண்டும் கோபப்படுவது சருமத்தையும் சேதப்படுத்தும். இது உடலில் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. சருமத்தில் சுருக்கங்களும் கருமையும் விரைவாகத் தோன்றும். மெதுவாக உங்கள் முகம் சோர்வடைந்து உயிரற்றதாகிவிடும். எனவே, உங்களுக்கு அதிகமாக கோபம் வந்தால் ஆழ்ந்து ஒரு முறை மூச்சை இழுத்து விடுங்கள், தியானம் செய்யுங்கள். இது கோபத்தினால் வரும் பிரச்சனையையும் முக வறட்சியையும் குறைக்கும்.

தூக்கம்:

தூக்கமின்மை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். போதுமான தூக்கம் இல்லாதபோது, ​​உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையற்றதாகிவிடும். இது கருவளையங்கள், வீங்கிய கண்கள், கரும்புள்ளிகள் மற்றும் சருமத்தில் முன்கூட்டியே முதுமை அடைதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், தூக்கத்தின் போது தோல் தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது. எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.

ALSO READ: இரவில் சூடான குளியல் சுகம் மட்டுமல்ல! உடலுக்கு இவ்வளவு நன்மையை தருமா..?

உடற்பயிற்சி:

உங்களுக்கு உடல் செயல்பாடு இல்லாததும் சருமத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும்.  உடல் செயல்பாடு இல்லாதபோது, வளர்சிதை மாற்றம் குறைகிறது. உடலில் இரத்த ஓட்டமும் பலவீனமடைகிறது. அதன் விளைவு உங்கள் சருமத்தில் நேரடியாகத் தெரியும். இதன் காரணமாக, தோல் தளர்வாக மாறத் தொடங்கி, சருமத்தில் சுருக்கம் ஏற்படும். எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, யோகா அல்லது லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.