Food Recipe: ஆரோக்கியமான தென்னிந்திய உணவு.. எண்ணெய் இல்லா பெப்பர் மட்டன் செய்முறை இதோ!
Oil-Free Pepper Mutton Recipe: தென்னிந்திய உணவுப் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிக்கும் மட்டன், பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் இல்லாத மிளகு மட்டன் செய்முறை, எளிதில் செய்யக்கூடியது மட்டுமல்லாமல், ஆரோக்கியமானது. குறைந்த மசாலா பொருட்களுடன், சுவையான மட்டனை எப்படி தயாரிப்பது என்பதை இந்த செய்முறை விளக்குகிறது.

பெப்பர் மட்டன்
தென்னிந்திய உணவு பாரம்பரியங்களில் மட்டன் (Mutton) மிக முக்கிய பங்கு வகிக்கும். மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி என பல வகைகள் உண்டு. பெரும்பாலும் நாம் அனைவரும் பெப்பர் சிக்கன் ரெசிபியை மட்டுமே அடிக்கடி செய்து சாப்பிடுவோம். ஆனால், பெப்பர் மட்டன் ரெசிபியை கேள்விப்பட்டது உண்டா..? இந்த மட்டனின் சிறப்பு என்னவென்றால், இதை தயாரிப்பதில் ஒரு துளி எண்ணெய் கூட (Oil-free) பயன்படுத்த தேவையில்லை. ஆனால், இதன் சுவை மிக அற்புதமாக இருக்கும். நீங்களும் மட்டன் லவ்வராக இருந்தால், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். அதன்படி, பெப்பர் மட்டன் (Pepper Mutton) செய்ய தேவையான பொருட்கள் மற்றும் ரெசிபி செய்முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: சன்டேவில் மணமணக்கும் மட்டன் சாப்ஸ்.. சூப்பராக இப்படி செய்து சாப்பிடுங்க!
பெப்பர் மட்டன்
தேவையான பொருட்கள்:
பெப்பர் மட்டன் ரெசிபியை செய்ய உங்களுக்கு அதிக பொருட்கள் தேவையில்லை. இந்த சுவையான மட்டம் செய்ய சமையலறையில் இருக்கும் சில பொருட்களே போதுமானது.
- மட்டன் – அரை கிலோ
- வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
- தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
- இஞ்சி- பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- கிராம்பு – 2 முதல் 3
- பிரியாணி இலை – 1
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
ALSO READ: சூடான டீயுடன் சுவையான ஸ்நாக்ஸ்.. ஈஸியா மீன் பக்கோடா செய்வது எப்படி..?
பெப்பர் மட்டன் செய்வது எப்படி..?
- முதலில் கடைகளில் வாங்கிய மட்டனை நன்றாக கழுவி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அலசி எடுத்து கொள்ளவும். அதன்பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி பொடி பொடியா எடுத்து கொள்ளவும்.
- தொடர்ந்து, ஒரு பாத்திரத்தை எடுத்துகொண்டு அதில் கழுவிய மட்டனை போட்டு கிராம்பு, பிரியாணி இலைகள், மஞ்சள் மற்றும் சிறிது கரம் மசாலா சேர்க்கவும்.
- இதன் தொடர்ச்சியாக, நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். கரண்டியால் எல்லாவற்றையும் மட்டனுடன் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.
- இப்போது கேஸ் அடுப்பை ஆன் செய்து, பாத்திரத்தை மூடி நேரடியாக வைக்கவும். குறைந்த தீயில் மட்டனை வேகவிடவும். இதன்போது மட்டன் மெதுவாக அதன் தண்ணீரை வெளியிடுகிறது.
- இதன் காரணமாக, மட்டன் அதன் தண்ணீரில் வேக தொடங்கும். சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைத்த பிறகு, மட்டன் வெந்து அனைத்து மசாலா பொருட்களும் நன்றாக கலக்கும்.
- இறுதியாக, 2 ஸ்பூன் மிளகு தூளை தூவி மட்டனுடன் நன்றாக கலந்துவிடவும். இதன்பிறகு கேஸை அணைக்கவும். அவ்வளவுதான் எண்ணெய் இல்லாமல் தயாரிக்கப்பட்ட பெப்பர் மட்டன் ரெடி.
குறிப்பு – பெப்பர் மட்டனில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. எண்ணெய் இல்லாமல், குறைந்த அளவிலான மசாலா பொருட்களுடன் சமைக்கப்படுவதால், இது வயிற்றில் அதிக கனத்தை ஏற்படுத்தாது. மேலும் எளிதில் ஜூரணமாகும்.