AC Prevention Tips: ஏசியை பயன்படுத்த தயக்கமா..? குளிர்காலத்தில் இந்த தவறு வேண்டாம்..!
Winter Air Conditioner Care Tips: குளிர்காலத்தில் ஏசியின் வெளிப்புறத்தை மூடுவது அதன் வயரிங் அல்லது PCB-யை சேதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நாட்கள் மூடி வைக்கப்படும்போது எலிகள் ஏசியில் புகுந்து வயரை சேதப்படுத்தலாம். குளிர்காலத்தில் இருண்ட மற்றும் சூடான இடத்தைத் தேடுவதால் எலிகளுக்கு வீடாக அமையலாம்.

ஏசி பராமரிப்பு
குளிர்காலத்தில் (Winter) அதிக பனி இருக்கும் என்பதால் ஏசியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இதனால், பலரும் குளிர்காலத்தில் ஏசியை மூடி வைக்கிறார்கள். இருப்பினும், இந்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். பல ஆண்டுகளாக, ஏசி (Air Conditioner) தொழில்நுட்ப வல்லுநர்கள் அடுத்த பருவ காலம் வரும் வரை ஏசியை மூடி வைப்பது நல்லதல்ல என்று கூறி வருகின்றனர். இது உங்கள் ஏசியில் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக அடுத்த கோடை மாதத்தில் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு பழுதுபார்ப்புகளுக்கு நீங்கள் நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். அதன்படி, குளிர்காலத்தில் செய்யக்கூடாத தவறுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குளிர்காலத்தில் தண்ணீரை தொட பயமா? இப்படி க்ளீன் செய்தால் வீடு பளபளக்கும்!
கேஸ் கசிவு:
ஏசியை மூடுவது கேஸ் கசிவை ஏற்படுத்தலாம். பொதுவாக ஏசியை நீண்ட நேரம் கவனிக்காமல் விடக்கூடாது என்றும், குளிர்காலத்தில் கூட மாதத்திற்கு இரண்டு முறையாவது 15-20 நிமிடங்கள் இயக்க வேண்டும் என்றும் சி தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தப்படுகிறது.
இதனுடன், ஏசி வாயு என்று பொதுவாக அழைக்கப்படும் ஏசியில் உள்ள குளிர்பதனப் பொருள், ஏசி நீண்ட நேரம் அணைக்கப்படும்போது குவிய தொடங்குகிறது. பின்னர், நீண்ட நாட்களுக்கு பிறகு ஏசியை இயக்கும்போது, குளிர்பதனப் பொருள் அல்லது எரிவாயு கசிய தொடங்கி வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
வயரிங் மற்றும் PCB சேதமடையும் அபாயம்:
குளிர்காலத்தில் ஏசியின் வெளிப்புறத்தை மூடுவது அதன் வயரிங் அல்லது PCB-யை சேதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நாட்கள் மூடி வைக்கப்படும்போது எலிகள் ஏசியில் புகுந்து வயரை சேதப்படுத்தலாம். குளிர்காலத்தில் இருண்ட மற்றும் சூடான இடத்தைத் தேடுவதால் எலிகளுக்கு வீடாக அமையலாம். நீண்ட நாட்கள் மூடப்பட்ட ஏசி அனில் மற்றும் எலிகளுக்கு வெப்பத்தை வழங்குகிறது. மேலும் பெரும்பாலான நேரங்களில் எலி மற்றும் அனில்கள் ஏசி மற்றும் பிற வயர்களை சேதப்படுத்தலாம்.
கம்ப்ரசர் சேதமடையலாம்:
ஏசியை மூடி வைத்திருப்பதால் அடுத்த சீசன் வரை, அதாவது கோடை காலம் வரை கம்ப்ரசர் சேதமடைய வாய்ப்புள்ளது. ஏசியின் கம்ப்ரசரில் எண்ணெய் இருக்கும், மேலும் கம்ப்ரசரின் பிஸ்டன் போன்ற இயந்திரங்கள் எண்ணெயின் உதவியுடன் ஏசியில் வாயு ஓட்டத்திற்கு உதவுகின்றன. குளிர்காலத்தில் ஏசியை மூடி வைத்து 6-7 மாதங்கள் மூடி வைக்கும்போது, கம்ப்ரசர் எண்ணெய் நிலையானதாகவும் தடிமனாகவும் மாறும். இது நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்படுத்தும் சரியானதாக இயங்காது.
கவர் இல்லாமல் ஏசி அழுக்காகுமா?
தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்றுப்படி, குளிர்காலத்தில் அழுக்கிலிருந்து பாதுகாக்க ஏசியை மூடி வைத்திருப்பது உங்களுக்கு நல்லது. ஆனால், அவ்வப்போது இயக்குவது நல்லது. எந்த ஏசியும் அதை இயக்கும்போது மட்டுமே வெளிப்புற காற்றுகளை உள்ளித்து அழுக்காகி கொள்ளும்.