Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AC Prevention Tips: வெயில் காலத்தில் ஏசி ஏன் வெடிக்கின்றன..? வெடிக்காமல் தடுப்பது எப்படி..?

AC Explosions in Summer: தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், ஏசி வெடிப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் அதிக வெப்பம், மின்னழுத்த மாறுபாடு, மற்றும் சரியான பராமரிப்பு இல்லாமை. ஏசி வெடிப்பைத் தவிர்க்க, தரமான வயரிங், சுத்தம், சரியான நிறுவல், வழக்கமான சர்வீஸ் மற்றும் சரியான பயன்பாடு அவசியம்.

AC Prevention Tips: வெயில் காலத்தில் ஏசி ஏன் வெடிக்கின்றன..? வெடிக்காமல் தடுப்பது எப்படி..?
ஏசி வெடிப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Apr 2025 17:08 PM IST

கோடை காலம் (Summer) என்பதால் தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டி கடுமையான வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், வெப்ப நிலையில் இருந்து தப்பிக்க மக்கள் மூடிய அறைகளில் ஏசி காற்றில் தஞ்சம் அடைகின்றனர். இருப்பினும், இப்போதெல்லாம் ஏசி தீப்பிடிக்கும் (Fire) செய்திகளை அடிக்கடி கேட்டு வருகிறோம். கோடைக்காலத்தில் வீடுகள் முதல் அலுவலகங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஏசி பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் கோடைகாலத்தில் ஏசிக்கள் (Air Conditioner) ஏன் வெடிக்கின்றன..? வெடிப்பை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏசி வெடிப்பதற்கான காரணம் என்ன..?

இந்தியாவில் ஏசியின் கண்டன்சர்கள் பொதுவாக 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்படுகிறது. ஆனால், சுற்றுப்புற வெப்பநிலை கண்டன்சன் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும்போது, ஏசி வேலை செய்வதை நிறுத்திவிடும். இதன் காரணமாக, ஏசி கண்டன்சரில் அழுத்தம் அதிகரித்து, கண்டன்சர் வெடிக்கும் அபாயங்கள் அதிகரிக்கிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் காரணமாக, மின்னழுத்தம் குறையும்போது, அமுக்கி மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அமுக்கி மற்றும் பிற உபகரணங்களின் மீது அதிகப்படியான அழுத்தம் செலுத்தப்படும்போது, அவை அதிகமாக சூடாகின்றன. இது தீ ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஏசி கண்டன்சர் மற்றும் காற்று வெளியேறும் இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும், ஏசியின் வெப்பம் வெளியேறாது. இதனாலும் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஏசி வெடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?

  • ஏசி வயரிங் செய்யும்போது அது வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, எப்போது தர சான்றிதழ் பெற்ற பிராண்டட் வயர்களை பயன்படுத்தலாம்.
  • ஏசியில் உள்ளே இருக்கும் கண்டன்சரி இருக்கும் அழுக்கு அல்லது தூசி படிய விடாதீர்கள். அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
  • வெயில் படாத இடத்திலும், நிழல் இருக்கும் இடத்திலும் ஏசி கம்ப்ரசரை நிறுவ செல்லுங்கள்.
  • கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இருக்கும் ஏசியை சர்வீஸ் செய்து கொள்ளுங்கள்.
  • இரவு நேரம் முழுவதும் ஏசி பயன்படுத்திய பிறகு, பகல் நேரங்களிலும் ஏசியை பயன்படுத்தாதீர்கள். குறைந்தது 2 மணிநேரமாவது அதற்கு ஓய்வு கொடுங்கள்.
  • 5 முதல் 6 மணிநேரம் ஏசியை இயக்கிய பிறகு அவ்வபோது அதை அணைத்து பயன்படுத்துங்கள்.
  • ஏசி பயன்படுத்தும்போது ஜன்னல் வழியாகவோ, கதவு வழியாகவோ சூரிய ஒளி உள்ளே வர அனுமதிக்காதீர்கள்.
  • எவ்வளவு வெயில் அடித்தாலும் ஏசி வெப்பநிலையை 24 டிகிரியாக வைத்து பயன்படுத்துங்கள். இதுவே போதுமானது.
  • புது ஏசியை நிர்வகிக்கும்போது மினி சர்க்யூட் பிரேக்கர் MCB ஐ பயன்படுத்துங்கள்.