வீட்டில் கைக்குழந்தை இருக்கா? உஷார்.. இந்த விஷயங்களில் அதிக கவனமா இருங்க!
Baby Safety Tips : குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகளில் சாலை விபத்துகளை தவிர, பெரும்பாலான விபத்துகள் வீட்டிலேயே ஏற்படுகின்றன. எனவே, குழந்தைகள் இருக்கும் வீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதேபோல, சுகாதாரமாக வைக்க வேண்டும். இல்லையெனில் சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடும்.

குழந்தை
சென்னை, செப்டம்பர் 05 : சமீப நாட்களில் குழந்தைகள் உயிரிழப்பது நடந்து வருகிறது. குறிப்பாக, வீட்டில் இருக்கும் குழந்தைகள் மின்சாரம் தாக்கியும், தண்ணீர் வாளியில் விழுந்தும் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பெற்றோர்களின் கவனக் குறைவே காரணம். அண்மையில், கடலூர் மற்றும் சென்னை ஆவடியில் கைக்குழந்தைகள் தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. விளையாட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகளில் சாலை விபத்துகளை தவிர, பெரும்பாலான விபத்துகள் வீட்டிலேயே ஏற்படுகின்றன. குழந்தைகள் பிறப்பது முதல் பள்ளிக்கு செல்லும் வரை அவர்கள் வீட்டில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட வீட்டை நாம் அவர்களுக்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, குழந்தைகளை இருக்கும் வீட்டை பாதுகாப்பாகவும், நன்றாகவும் வைத்துக் கொள்வது அவசியம். இதுகுறித்து விரிவாக இப்போது பார்ப்போம். அதன்படி, கைக் குழந்தைகள் இருக்கும் வீட்டை சுற்றி பூதர் போன்று செடிகள் அதிகமாக இருக்கக் கூடாது. மேலும், கொசு போன்றவற்றை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் கொசு, பூச்சிகள் குழந்தைகளை கடிக்க வாய்ப்புள்ளது. மேலும், வீட்டிற்குள் கொசுக்கள் வராமல் இருக்க ஜன்னல்களில் கொசு வலை அமைக்க வேண்டும். இதன் மூலம் கொசுக்கள் வீட்டிற்கு வராமல் தடுக்க முடியும்.
Also Read : சர்க்கரை சாப்பிட்டால் முடி சீக்கிரம் நரைக்குமா..? இது உண்மைதானா..?
கழிவறை போன்ற தண்ணீர் வாளிகள் இருக்கும் இடங்களில் குழந்தைகளை தனியாக விடக் கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெரும்பாலும் தண்ணீர் வாளிகளை காலியாக வைக்க உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் அவர்கள் எட்டாத இடத்தில் வாளிகளை வைக்க வேண்டும். மேலும், இன்றைக்கு பல குழந்தைகளுக்கு காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படக் காரணம் ஒரு பொருளை தொண்டயை அடைத்து மூச்சுத் திணறல் ஏற்படுவதால் தான். எனவே சிறிய பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
இந்த விஷயங்களில் அதிக கவனமா இருங்க
சிறுசிறு பழ விதை, காய்கறி விதைகள் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். குறிப்பாக மின்சாரம் தாக்கி குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே, குழந்தைகளுக்கு எட்டாத வகையில் செல்போனுக்கு ஜார்ஜ் செய்ய வேண்டும். ஸ்விட்ச் பாக்ஸை எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். மேலும், வயர்கள் தொங்கிக் கொண்டு இருக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Also Read : இளநரை ஏற்படாமல் இருக்கணுமா? இந்த 5 விஷயங்களைத் தவிருங்கள்
குழந்தைகளை சமையல் அறைக்குள் அனுமதிக்க வேண்டாம். முடிந்தால் சமையல் அறை கதவை மூடியே வைக்க வேண்டும். இல்லையெனில் சமையலறைக்குள் குழந்தை வராமல் இருக்க, அறையின் தொடக்க இடத்தில் தடுப்புகள் வைக்க வேண்டும். மேலும், சமையலறையில் கத்தி, அரிவாள்மனை போன்ற கூர்மையான ஆயுதங்களை கீழே வைக்க கூடாது.
பால், குழம்பு, வெந்நீர் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். வீட்டின் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருந்தால் இரும்பு கேட் வைக்க ஏற்பாடு செய்யலாம். ஜன்னல் கதவுகளை எப்போதுமே மூடியே வைக்க வேண்டும். படிக்கட்டு பக்கம் போகாமல் இருக்க வீட்டின் கதவை பூட்டியே வைக்க வேண்டும். இவ்வாறு வீட்டில் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியம்.