Kitchen Tricks: சமைக்கும்போது வெறுக்க வைக்கிறதா மீன் வாசனை..? எளிதாக ஸ்மெலை இப்படி நீக்கலாம்!
Fish Cooking Tips: சமையலறையில் சமைக்கும்போது சிலருக்கு மீன் சாப்பிட ஆசை இருந்தாலும் அதன் வாசனை காரணமாக சாப்பிட விரும்புவதில்லை. சில நேரங்களில் மீன் சாப்பிட்ட பிறகு, சிலருக்கு குமட்டல் ஏற்படும். நீங்கள் சில குறிப்புகளைப் பின்பற்றினால், மீனின் வாசனை மறைத்துவிடலாம்.

உலகின் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக மீன் (Fish) கருதப்படுகிறது, இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, வைட்டமின் பி2, இரும்புச்சத்து, துத்தநாகம், அயோடின், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. மீன் சாப்பிடுவது நல்ல இதய ஆரோக்கியத்தை (Healthy Heart) மேம்படுத்துகிறது மற்றும் மனச்சோர்வு மற்றும் டைப் 1 சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது. பலர் மீன் என்றால் மிகவும் பிடிக்கும். சிலருக்கு மீன் என்றால் சுத்தமாக பிடிக்காததால் சாப்பிடுவதில்லை. சமையலறையில் சிலருக்கு மீன் சாப்பிட ஆசை இருந்தாலும் அதன் வாசனை காரணமாக சாப்பிட விரும்புவதில்லை. சில நேரங்களில் மீன் சாப்பிட்ட பிறகு, சிலருக்கு குமட்டல் ஏற்படும். நீங்கள் சில குறிப்புகளைப் பின்பற்றினால், மீனின் வாசனை மறைத்துவிடலாம். அதன்படி, என்ன செய்து மீனின் வாசனையை போக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தயிரும், யோகர்ட்டும் ஒன்றா..? வேறுபட்டவையா..? இதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன?




மீன் வாசனை நீக்கும் வழிகள்:
- மீனை வெட்டிய பிறகு, எலுமிச்சை சாற்றைத் தடவவும். 15-20 நிமிடங்கள் அந்த நிலையில் வைக்கவும். எலுமிச்சையின் புளிப்பு அமிலத்தன்மை மீன் வாசனையை நீக்கும்.
- மீன் வாசனையை நீக்க விரும்பினால், புளிப்பு தயிரை தேய்க்கலாம். இதை பச்சை மீனின் மீது 20 நிமிடங்கள் தடவி வைக்கவும். இது மீன் வாசனையை பெருமளவில் குறைக்கும்.
- மீனை வெட்டிய பிறகு, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக தேய்க்கவும். இந்த இரண்டு பொருட்களும் இயற்கை கிருமிநாசினிகளாக செயல்படுகின்றன. இது ஒரு வாசனை நீக்கியாகவும் செயல்படுகிறது.
- மீன்களைக் கழுவும்போது 1 டீஸ்பூன் வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம். இது மீன் வாசனையை அதிக அளவில் போக்க உதவும்.
ALSO READ: செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை… கைகளால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – ஆச்சரிய தகவல்
- சில நேரங்களில், மீன்களைக் கழுவும்போது மேற்கண்ட முறைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு தீர்வு இருக்கிறது. மீன் சமைக்கும்போது கொஞ்சம் அதிகமாக இஞ்சி மற்றும் பூண்டைப் பயன்படுத்துவது மீன் வாசனையை நீக்கும். நீங்கள் அதிகமாக இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்த்தால், சமைக்கும்போது அதை நன்றாக அரைக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
- மீன் சமைக்கும்போது வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றைச் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும். இது மீன் வாசனையையும் குறைக்கிறது. மீனை சரியான வெப்பநிலையில் சமைப்பதும் முக்கியம். இது மீன் வாசனையை நீக்கும்.