Hug Day 2026: காதலில் அரவணைப்பை தரும் கட்டிப்பிடிப்பு தினம்.. கட்டிப்பிடித்தால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?

Valentine Week: கட்டிப்பிடிப்பு தினம் எப்படி உருவானது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், உடல் தொடுதல், உணர்ச்சி வெளிப்பாடு, தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மீது அது ஏற்படுத்தக்கூடிய நல்ல தாக்கம் இதை முக்கியத்துவமாக மாற்றுகிறது. அதன்படி, கட்டிப்பிடிக்கும்போது உடலில் பல மாற்றங்களும் நிகழ்கிறது.

Hug Day 2026: காதலில் அரவணைப்பை தரும் கட்டிப்பிடிப்பு தினம்.. கட்டிப்பிடித்தால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?

கட்டிப்பிடிப்பு தினம்

Published: 

12 Feb 2026 08:00 AM

 IST

காதலர் வாரத்தில் (Valentine Week) கட்டிப்பிடிப்பு தினம் (Hug Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடிப்பு என்பது வெறும் உடல் ரீதியான தொடுதல் மட்டுமல்ல, அன்பான உணர்வும் ஆகும். உங்கள் துணையையோ அல்லது நெருக்கமானவர்களையோ கட்டிப்பிடித்தல் மூலம் ஆழமான அன்பை வெளிப்படுத்தலாம். பலரும் கட்டிப்பிடித்தல் என்பது காமம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது உண்மையில் அப்படியல்ல, இது காதல், பாதுகாப்பு, அரவணைப்பு, ஆறுதல் மற்றும் நட்பின் அடையாளமாகவும் இருக்கலாம். இந்தநிலையில், கட்டிப்பிடித்தல் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: டெடியுடன் காதலர் தினம்.. டெடி தினத்தை எப்படி கொண்டாடுவது?

மன அழுத்தம் குறையும்:

உங்களுக்கு நெருக்கமானவர்களை கட்டிப்பிடிக்கும்போது மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும் என்று நம்பப்படுகிறது. அதாவது, கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவை குறைப்பதில் மிகவும் உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:

கட்டிப்பிடிக்கும்போது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், நமது உடல்கள் வெளிப்புற பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவி செய்யும்.

கட்டிப்பிடிப்பு தினத்தின் வரலாறு என்ன..?

கட்டிப்பிடிப்பு தினம் எப்படி உருவானது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், உடல் தொடுதல், உணர்ச்சி வெளிப்பாடு, தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மீது அது ஏற்படுத்தக்கூடிய நல்ல தாக்கம் இதை முக்கியத்துவமாக மாற்றுகிறது. கட்டிப்பிடிப்பு தினத்தின் தோற்றம் எதுவாக இருந்தாலும், ஆண்டு முழுவதும் அன்பையும் அரவணைப்பையும் உருவாக்க இந்த நாள் உதவும்.

ALSO READ: காதலர் வாரத்தில் ப்ராமிஸ் டே எப்போது நுழைந்தது? இதன் அர்த்தம் என்ன?

கட்டிப்பிடிப்பு தினத்தின் முக்கியத்துவம் என்ன..?

  • உங்கள் அன்பு கொண்டவர்களிடம் வார்த்தைகள் மூலம் காதலை வெளிப்படுத்த முடியாத நேரத்தில், கட்டிப்பிடிக்கும்போது அன்பு, ஆறுதல், ஆதரவு மற்றும் புரிதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்.
  • கட்டிப்பிடிப்புகள் “காதல் ஹார்மோன்” ஆக்ஸிடோசினை வெளியிடுகின்றன. இது நம்பிக்கை, பிணைப்பு மற்றும் உணர்ச்சிப் பாதுகாப்பை வளர்க்கிறது. இது காதல் உறவுகளை வலுப்படுத்தும்.
  • ஒருவரின் சம்மதத்துடன் கட்டிப்பிடிப்பதும் தனிப்பட்ட எல்லைகளை மதிப்பதும் அனைவரும் பங்கேற்பதில் சௌகரியமாக இருப்பதை உறுதி செய்கிறது. இது மிகவும் உள்ளடக்கிய மற்றும் மரியாதைக்குரிய சூழலை உருவாக்கும்.
  • பெரும்பாலும் காதல் உறவுகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும், கட்டிப்பிடிப்பை உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். உதாரணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள், நட்பு, சக ஊழியர்களிடம் மேற்கொள்வது ஆறுதலை தரும்.
ஐரோப்பாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: என்னென்ன தெரியுமா?
இனி ரூ.25,000 முதல் உடனடி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் - எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு
மது இல்லாத திருமணங்களுக்கு ரூ.51,000 பரிசு - உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
கால்வாயில் விழுந்த கார்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..