Kitchen Hacks: வாங்கி வந்த முட்டைகள் சட்டென கெட்டு விடுகிறதா..? காரணம் இதுதான்!
Best Way To Store Eggs: அமெரிக்கா போன்ற நாடுகளில், முட்டைகளை கழுவி, கிருமி நீக்கம் செய்து, பின்னர் விற்பனை செய்வதற்கு முன்பு பேக் செய்யப்படுகிறது. இந்த செயல்முறை முட்டையின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கான பூவை நீக்குகிறது, இது பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால், ஆசிய நாடுகள் உள்பட இந்தியாவிலும் முட்டைகள் கழுவப்படாமல் விற்கப்படுகின்றன.
முட்டைகளை (Eggs) ருசிக்காமல் பலருக்கும் ஒருவேளை சாப்பாடு கூட இறங்காது என்றே சொல்லலாம். அந்தவகையில், முட்டை காதலர்கள் இங்கு ஏராளம். அதன்படி, முட்டைகள் மலிவான விலைக்கு கிடைக்கிறது என்று பலரும் நிறைய வாங்கி வந்து சமையலறையில் வைத்துவிடுகிறார்கள். இது நாளடைவில் சரியான முறையில் வைக்காததால் கெட்டு விடுகின்றன. அந்தவகையில், வாங்கி வந்த முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதா அல்லது வெளியில் வைப்பதா என்பதில் சந்தேகம் கொள்கிறார்கள். சமூக ஊடகங்களில் கூட, முட்டைகளை வெளியே வைக்க வேண்டுமா அல்லது குளிர்சாதன பெட்டியில் (Refrigerator) வைக்க வேண்டுமா என்பது பற்றி மக்கள் இன்னும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், முட்டைகளை எங்கே வைப்பது பாதுகாப்பானது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இட்லிகள் மென்மையாக வரவில்லையா? பஞ்சு போல வர இந்த ட்ரிக்ஸ் உதவும்!
முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா..?
அமெரிக்கா போன்ற நாடுகளில், முட்டைகளை கழுவி, கிருமி நீக்கம் செய்து, பின்னர் விற்பனை செய்வதற்கு முன்பு பேக் செய்யப்படுகிறது. இந்த செயல்முறை முட்டையின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கான பூவை நீக்குகிறது, இது பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால், ஆசிய நாடுகள் உள்பட இந்தியாவிலும் முட்டைகள் கழுவப்படாமல் விற்கப்படுகின்றன. அவற்றின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கைப் பாதுகாக்கின்றன. இருப்பினும், இந்தியாவின் காலநிலை, குறிப்பாக வெப்பம் மற்றும் ஈரப்பதம், குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. வெப்பமான வானிலை முட்டைகள் விரைவாக கெட்டுப்போகவும், துர்நாற்றம் வீசவும், பாக்டீரியாக்கள் விரைவாகப் பெருகவும் வழிவகுக்கும். எனவே, கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வைப்பது நல்லது. குளிர்காலத்தில், கழுவப்படாத முட்டைகள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை வெளியில் ப்ரஷாக வைத்து பயன்படுத்தலாம்.
முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் சரியான முறையில் வைப்பது எப்படி..?
- சூப்பர் மார்க்கெட்டில் குளிர்சாதனப் பெட்டில் இருந்து நீங்கள் முட்டைகளை வாங்கினால், உங்கள் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
- முட்டைகளை ஓடு உடையாமல் இருக்க அட்டைப்பெட்டி அல்லது தட்டில் வைக்கவும்.
- பலரும் குளிர்சாதன பெட்டி கதவில் உள்ள அடுக்குகளில் முட்டைகளை வைக்கிறார்கள். எக்காரணத்தை அப்படி வைக்க வேண்டாம். ஏனென்றால் கதவுகளை திறக்கும்போது வெப்பநிலை அடிக்கடி மாற்றமடைந்து விரைவாக கெட்டுப்போகலாம்.
முட்டைகளை அடிக்கடி வெளியே எடுப்பது தவறா?
முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே வைக்கும்போது அவற்றின் மேற்பரப்பில் ஈரப்பதம் சேரக்கூடும். இந்த ஈரப்பதம் பாக்டீரியாக்கள் வளர சரியான சூழலை உருவாக்குகிறது. எனவே, முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்தவுடன், அடிக்கடி வெளியே எடுத்து, மீண்டும் உள்ளே வைப்பது நல்லதல்ல.
ALSO READ: காய்கறிகளை சரியான முறையில் கழுவுவது ஏன் முக்கியம்..? இது இவ்வளவு ஆபத்தானதா?
ஒரு முட்டை பிரஷானதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது..?
ஒரு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, ஒரு முட்டையை உள்ளே விடுங்கள். முட்டை கீழே மூழ்கினால், அது ப்ரஷானது. அதுவே மிதந்தால் அல்லது நிமிர்ந்து நின்றால், அவை நாள்பட்ட முட்டைகள் ஆகும்.