AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேய்ந்த நான்-ஸ்டிக் தவா: தெரியாமல் நச்சை சாப்பிடுகிறோமா?

Non-Stick Cookware: தேய்ந்த அல்லது கீறல் பட்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களில் இருந்து நுண் பிளாஸ்டிக் துகள்கள் உணவுடன் கலந்து உடலுக்குள் செல்லும் அபாயம் அதிகம். இந்த பாத்திரங்களில் உள்ள “அழியாத வேதிப்பொருட்கள்” நீண்ட காலம் உடலில் தங்கி ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கக்கூடும். அதிக வெப்பம் மற்றும் இரும்பு கரண்டிகள் பயன்படுத்துவது இந்த பூச்சை வேகமாக சேதப்படுத்தும்.

தேய்ந்த நான்-ஸ்டிக் தவா: தெரியாமல் நச்சை சாப்பிடுகிறோமா?
நான்-ஸ்டிக் பாத்திரங்கள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Apr 2026 13:33 PM IST

சமையலறையில் நாம் சௌகரியத்திற்காக பயன்படுத்தும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள், நம் தினசரி வாழ்க்கையை எளிதாக்கினாலும், அவை நம் ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்தாக மாறக்கூடும் என்பதைக் கவனிக்க வேண்டும். புதிய நான்-ஸ்டிக் தவாவின் பளபளப்பும், உணவு ஒட்டாமல் சுலபமாக சமைக்க முடிவதும் நம்மை ஈர்க்கும். குறிப்பாக தோசை போன்ற உணவுகள் அழகாக வருவது மகிழ்ச்சியை தரும். ஆனால் காலப்போக்கில் அந்தப் பளபளப்பு மங்கிவிட்டு, மேற்பரப்பில் தேய்வு ஏற்படுவது சாதாரணம். இதையே பலர் கவனிக்காமல் தொடர்ந்து பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

கீறல்கள் மற்றும் நுண் பிளாஸ்டிக் துகள்கள்

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் மேற்பரப்பு பூச்சில் சிறிய கீறல் ஏற்பட்டால்கூட, அது ஆயிரக்கணக்கான நுண் பிளாஸ்டிக் துகள்களை வெளியிடக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாத்திரம் அதிகமாக சேதமடைந்திருந்தால், இந்த துகள்களின் அளவு லட்சக்கணக்கில் அதிகரிக்கலாம். கண்ணுக்குப் புலப்படாத இந்த துகள்கள் நாம் சமைக்கும் உணவுகளுடன் கலந்து, நேரடியாக நம் உடலுக்குள் செல்கின்றன என்பது கவலைக்கிடமான விஷயம்.

அழியாத வேதிப்பொருட்களின் தாக்கம்

நான்-ஸ்டிக் பூச்சில் பயன்படுத்தப்படும் சில வேதிப்பொருட்கள், உடலுக்குள் சென்ற பிறகு எளிதில் வெளியேறாமல் நீண்ட காலம் தங்கக்கூடியவை. இவை “அழியாத வேதிப்பொருட்கள்” என அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பொருட்கள் உடலில் சேர்ந்து கொண்டே இருந்தால், ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கலாம் மற்றும் நீண்ட காலத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம்.

பயன்பாட்டு தவறுகள் அதிகரிக்கும் ஆபத்து

நான்-ஸ்டிக் பாத்திரங்களை நாம் எளிதாக சுத்தம் செய்ய முடியும் என்பதற்காக விரும்பினாலும், அவற்றைப் பயன்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது. இரும்பு கரண்டிகள் பயன்படுத்துதல் அல்லது அதிக வெப்பத்தில் சமைத்தல் போன்ற செயல்கள், அதன் பாதுகாப்பு பூச்சை வேகமாக சேதப்படுத்தும். கருப்பு நிறத்தில் இருந்த பாத்திரம் வெள்ளையாக மாறத் தொடங்கினால், அது அதன் மேற்பரப்பு அழிந்து, நச்சுத்துகள்கள் வெளியேறுவதை குறிக்கிறது.

பாதுகாப்பான மாற்று வழிகள்

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, கீறல் பட்ட அல்லது தேய்ந்த நான்-ஸ்டிக் பாத்திரங்களை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சமைக்கும் போது மர அல்லது சிலிகான் கரண்டிகளை பயன்படுத்துவது நல்லது. மேலும், பாரம்பரியமான இரும்பு பாத்திரங்கள், கல் சட்டிகள் அல்லது துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களுக்கு மாறுவது ஆரோக்கியமான தேர்வாகும். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், இது நீண்ட கால நன்மையை அளிக்கும்.

சிறிய முடிவுகள் – பெரிய பாதுகாப்பு

நாம் தினமும் எடுக்கும் சிறிய முடிவுகளே நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. ஒரு பழைய, சேதமடைந்த நான்-ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தாமல் விட்டு விடுவது போன்ற எளிய முடிவே, நம் உடலுக்கு பெரிய பாதுகாப்பாக அமையும். ஆரோக்கியமான வாழ்க்கைக்காக, நம் சமையல் முறைகளிலும், பயன்படுத்தும் பொருட்களிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

Follow Us