Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என்னோட ஃபிட்னஸ்க்கு காரணம் இதுதான் – சீக்ரெட் பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!

Hardik Pandya’s Fitness Secret : கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக கலக்கி வருகிறார். மேலும் களத்தில் ஆக்ரோஷமான செயல்பாடுகளுக்கு சொந்தக்காரர். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணவுப் பழக்கம் குறித்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

என்னோட ஃபிட்னஸ்க்கு காரணம் இதுதான் – சீக்ரெட் பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யா
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2025 20:06 PM

இந்தியாவின் முன்னணி  கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விளங்கும் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya), ஃபிட்னஸிலும் ஆர்வமிக்கவர். அவர்  ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை பின்பற்றுவதால் மிகவும் ஃபிட் ஆக இருக்கிறார்.  இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பின்பற்றும் உணவு முறைகள் குறித்து விரிவாக பேசியிருக்கிறார். அந்த  வீடியோவில் அவரிடம், உங்கள் தினசரி உணவுப் பழக்கம் என்ன ?  என்ன சாப்பிடுவீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விரிவாக பதிலளித்துள்ளார். அவர் பேசியது ஃபிட்னஸில் ஈடுபாடு உள்ளவர்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் பலனளிக்கும். இந்த கட்டுரையில் அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹர்திக் பாண்ட்யாவின் உணவுப் பழக்கம்

ஹர்திக் பாண்டயா களத்தில் ஆக்ரோஷமான செயல்பாடுகளுக்காக பெயர் பெற்றவர். இந்திய அணியின் ஆல்ரவுண்டராக கலக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உணவுப் பழக்கம் குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோவில், ஹர்திக் பாண்ட்யா காலை எழுந்ததும் 500 மில்லி தண்ணீர் குடிப்பதோடு துவங்குகிறார். இது தன்ன்னை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ள உதவுவதாக தெரிவிக்கிறார். இதன் பிறகு ஜிம்மிற்கு செல்கிறார். காலையில் தண்ணீர் குடிப்பது உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்கிறார்.

இதையும் படிக்க : உணவு பொருட்களில் காணப்படும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு நிறங்கள் – காரணம் என்ன?

ஜிம்மில் இருந்து திரும்பிய பிறகு 650 கலோரி மற்றும் 350 கிராம் புரோட்டீன் கொண்ட ஸ்மூத்தியை குடிப்பாராம். அதில் சூரியகாந்தி விதைகள், ஓட்ஸ், வாழைப்பழம், அவகாடோ, பாதாம் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்.

மதிய உணவிற்கு முன்னதாக அவர் ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இது செரிமானத்தையும் மேம்படுத்துவதோடு, பசியையும் கட்டுப்படுத்துகிறது. பின்னர் மதிய உணவில் ஜீரா ரைஸ், பருப்பு, கீரையை உணவாக எடுத்துக்கொள்கிறார். இதில் 550 கிராம் கலோரி மற்றும் 24 கிராம் புரோட்டீன் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.

மாலையில் கிரிக்கெட் பயிற்சிக்கு பிறகு 600 கலோரி மற்றும் 28 கிராம் புரோட்டீன் கொண்ட ஓட்ஸை சாப்பிடுகிறார். இரவு உணவுக்கு முன்னதாக 30 நிமிடங்களுக்கு முன் மீண்டும் ஆப்பிள் சைடர் வினிகர் பானத்தை குடிக்கிறார். அதன் பிறகு இரவில் அரிசி சாதம், கீரை ஆகியவை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பதால் இவ்வளவு நன்மைகளா? விவரம் இதோ!

உணவுப்பழக்கம் குறித்து ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Hardik Pandya (@hardikpandya93)

ஹர்திக் பாண்ட்யாவின் உணவுப் பழக்கத்தை வைத்து பார்க்கும்போது கலோரி குறைவானதாகவும் ஆனால் புரோட்டீன் அதிகம் கொண்டவையாகவும் இருக்கிறது. இது எடையை கட்டுப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஹர்திக் பாண்டியா அவர் உடலின் தேவைக்கு ஏற்ப உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறார். நாமும் மருத்துவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாம்.