Skin Care: தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் கேன்சர் வருமா..? மருத்துவர் சஹானா விளக்கம்!
Sunscreen Causes Cancer: சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணமான தீங்கு விளைவிக்கும் UV கதிர்களைத் தடுப்பதன் மூலம் தோல் புற்றுநோயைத் தடுக்கிறது. கடுமையான சூரிய ஒளியில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF கொண்ட ஃப்ராட்-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யவும்.

மருத்துவர் சஹானா
நாம் நாள்முழுவதும் வெளியில் சென்று வெயிலில் சுற்றி திரிவோம். இது நமது சருமத்தை கருமை மற்றும் சேதமடைய செய்யலாம். எனவே, நமது சருமத்தை பாதுகாக்க அழகு சாதன பொருட்களின் ஒன்றான சன்ஸ்கிரீனை (Sunscreen) பயன்படுத்துகிறோம். இருப்பினும், சன்ஸ்கிரீன் புற்றுநோயை உண்டாக்கும் என்ற ஒரு பொதுவான கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் பலரும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். இந்த நிலையில், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா அல்லது இதனால் தோல் புற்றுநோய் (Cancer) உண்டாகுமா என்பது குறித்தும், எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவர் சஹானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியும் பலன் இல்லையா..? காரணத்தை சொல்லும் மருத்துவர் சஹானா!
சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா..?
சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணமான தீங்கு விளைவிக்கும் UV கதிர்களைத் தடுப்பதன் மூலம் தோல் புற்றுநோயைத் தடுக்கிறது. கடுமையான சூரிய ஒளியில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF கொண்ட ஃப்ராட்-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யவும். தினமும் இதைப் பயன்படுத்துவது UV கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். சருமத்திற்கு பல வகைகளில் நன்மையை தரும்.
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம்?
சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்கள் தோல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாகும், இதில் மெலனோமா மற்றும் மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய் ஆகியவை அடங்கும். இந்த நிலைமைகளுக்கு எதிராக சன்ஸ்கிரீன் ஒரு கேடயமாக செயல்படுகிறது. சன்ஸ்கிரீன் ஒரு கேடயமாக செயல்படுகிறது, தீங்கு விளைவிக்கும் UV கதிர்கள் உங்கள் சருமத்தை அடைந்து சேதப்படுத்துவதைத் தடுக்கிறது.
சன்ஸ்கிரீனைத் தொடர்ந்து சரியாகப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இதைப் பயன்படுத்துவது உங்கள் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
ALSO READ: சரும பிரச்சனையை சரிசெய்யும் இளநீர் மேஜிக்.. அழகையும் மேம்படுத்தும் அதிசயம்..!
எந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்..?
கெமிக்கல் சன்ஸ்கிரீனை பயன்படுத்த உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது பயம் என்றால், அதற்கு மாற்றாக அழகு கலை நிபுணர்களின் ஆலோசனைபடி மினரல்ஸ் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். இது கர்ப்ப காலத்தில் பயன்படுத்தும் பெண்களுக்கும் பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் சன்ஸ்கிரீனை குறைந்தது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் சருமத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். இதுவும் பாதுகாப்பான ஒன்றாகும்.