Beauty Tips: சருமத்தை பிரகாசமாக்கும் கற்றாழை – மஞ்சள் கலவை.. ஆனால்! இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
Aloe Vera and Turmeric for Glowing Skin: கடைகள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் ரசாயன அடிப்படையிலான பொருட்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகள் மற்றும் சரும அழகு குறிப்புகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இத்தகைய விஷயங்களில் மற்றொன்றும் இப்போது அதிகளவில் பேசப்படுகிறது. அதன்படி, கற்றாழை மஞ்சளை கலந்து தடவுவதாகும்.
சரும பராமரிப்புக்காக இன்றைய நவீன காலத்தில் பலரும் இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்களை நோக்கி அதிகளவில் திரும்புகின்றனர். கடைகள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் ரசாயன அடிப்படையிலான பொருட்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகள் மற்றும் சரும அழகு குறிப்புகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இத்தகைய விஷயங்களில் மற்றொன்றும் இப்போது அதிகளவில் பேசப்படுகிறது. அதன்படி, கற்றாழை (Aloe Vera) மஞ்சளை கலந்து தடவுவதாகும். கற்றாழை மற்றும் மஞ்சள் இரண்டும் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட இயற்கை வைத்தியமாகும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து சருமத்தில் தடவினால், இது பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அந்தவகையில், கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் (Turmeric) கலந்து சருமத்தில் தடவுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியும் பலன் இல்லையா..? காரணத்தை சொல்லும் மருத்துவர் சஹானா!
கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
முகப்பரு:
மஞ்சளில் முகப்பரு பாக்டீரியாக்களை அழிக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கற்றாழை ஜெல் சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தைக் குறைக்கிறது.




சருமத்தைப் பிரகாசம்:
கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் கலவை சருமத்தை ஆழமாகச் சுத்தப்படுத்தி, இறந்த சருமத்தை நீக்கி, முகத்திற்குப் பளபளப்பையும், பிரகாசத்தையும் கொண்டு வருகிறது.
வயதான எதிர்ப்பு பண்புகள்:
கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் கலவையை சருமத்தில் பேக்காக போடும்போது ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன.
வடுக்களை குணப்படுத்தும்:
மஞ்சள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், கற்றாழை ஜெல் வடுக்களை குறைக்க உதவுகிறது.
ALSO READ: எது செய்தாலும் முடி உதிர்தல் இன்னும் நிற்கவில்லையா? இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்..!
கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள்
தோல் அழற்சி அல்லது ஒவ்வாமை:
சிலருக்கு தோல் பிரச்சினைகள் இருக்கலாம். கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் கலவையை பயன்படுத்துவது சிவத்தல், அரிப்பு அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.
சருமத்தை மஞ்சள் நிறமாக்கலாம்:
அதிகப்படியான மஞ்சளை பயன்படுத்துவது சருமத்தில் மஞ்சள் நிறத்தை படிய செய்யும். இது அவ்வளவு எளிதாக நீங்காது.
அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றதல்ல:
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சில நேரங்களில் இந்தக் கலவையை ஒட்டும் தன்மையுடதாக மாற்றும். இவை உங்களுக்கு முகப்பருவை அதிகரிக்கலாம்.
இரவு முழுவதும் அப்படியே விட்டால் தீங்கு:
கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் கலவை பேக்கை அதிக நேரம், குறிப்பாக இரவு முழுவதும் வைத்திருப்பது நல்லதல்ல. இது தோல் எரிச்சலை ஏற்படுத்தும்.