Smartphone Danger For Kids: குழந்தைகளுக்கு இந்த வயதில் மொபைல் போனா..? எச்சரிக்கும் மருத்துவர் நான்சி!

Kids Using Smartphones: 12 வயதிற்கு முன்பே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகள் தூக்கப் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, பதட்டம் அல்லது மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை கொடுக்கும். முற்றிலும் இதற்கு மொபைல் போன் மட்டுமே காரணம் இல்லையென்றாலும், சீக்கிரமாகவே மொபைல் போன்களை கொடுப்பது குழந்தைகளின் அன்றாட வழக்கத்தை படிப்படியாக சீர்குலைக்க செய்யும்.

Smartphone Danger For Kids: குழந்தைகளுக்கு இந்த வயதில் மொபைல் போனா..? எச்சரிக்கும் மருத்துவர் நான்சி!

மருத்துவர் நான்சி

Published: 

22 Dec 2025 21:24 PM

 IST

பெற்றோர்கள் இப்போது குழந்தைகளுக்கு (Childrens Care) பிறந்து சில மாதங்களிலேயே மொபைல் போன்களை கொடுத்து பழக்கப்படுத்துகிறார்கள். ஒரு குழந்தைக்கு சரியான வயதில் மொபைல் போன் கொடுப்பது பல நன்மைகளை அளிக்கும் என்றாலும், குழந்தைகள் பிறந்து சில மாதங்களிலேயேபோன் கொடுப்பது பல தீமைகளை ஏற்படுத்தும். இன்றைய காலத்தில் இதை பெரும்பாலான பெற்றோர்கள் அறிவது கிடையாது. தாங்கள் தூங்க வேண்டும், மற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்பதற்காக மொபைல் போன்களை (Mobile Phones) கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்வது குழந்தையின் மனவளர்ச்சி மற்றும் பேச்சு ஆற்றலை குறைக்கும் என்று மருத்துவர் நான்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: குழந்தையின் தொண்டையில் ஏதாவது சிக்கிவிட்டதா? பயம் வேண்டாம்! உடனடி முதலுதவியாக இதை செய்யுங்கள்!

எந்த வயதிற்கு மேல் மொபைல் போன் கொடுப்பது நல்லது..?


12 வயதிற்கு முன்பே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகள் தூக்கப் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, பதட்டம் அல்லது மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை கொடுக்கும். முற்றிலும் இதற்கு மொபைல் போன் மட்டுமே காரணம் இல்லையென்றாலும், சீக்கிரமாகவே மொபைல் போன்களை கொடுப்பது குழந்தைகளின் அன்றாட வழக்கத்தை படிப்படியாக சீர்குலைக்க செய்யும். மொபைல் போன்கள் பயன்படுத்த தொடங்கும் குழந்தைகள், சிறுவர்கள் பெரும்பாலும் வெகுநேரம் பயன்படுத்துகிறார்கள். இப்படியான திரை நேரம் அவர்களின் உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. கற்றல் ஆற்றலையும், குழந்தைகளின் மனதை அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக பாதிக்கிறது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சிறு வயதிலேயே அவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டால், அவர்களின் பல திறன்கள் வளராமல் போகலாம்.

குழந்தைகளை எந்த அளவிற்கு பாதிக்கும்..?

இதுமட்டுமின்றி, பிறந்து 3 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளை பக்கத்தில் படுக்க வைத்து பெற்றோர்கள் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களை பயன்படுத்துவது குழந்தைக்கு தனிமையை கொடுக்க தொடங்கும். இது குழந்தைகளின் கற்றல் மற்றும் பேச்சு திறனை குறைத்து, குழந்தைகள் பேசுவதை தாமதப்படுத்த தொடங்கும்.

ALSO READ: குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்க வேண்டும்..? பல் மருத்துவர் ஜனனி விளக்கம்!

பிறந்து 4 மாதம் முதல் 6 மாதங்கள் உட்பட்ட இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளின் எமோசனல், மன வளர்ச்சி அடைவதற்கான காலக்கட்டமாகும். இந்த காலக்கட்டத்தில்தான் குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதிகம் பேச வேண்டும், பாட வேண்டும், நம்மளும் கைதட்டி அவர்களுக்கும் கைதட்ட சொல்லி கொடுக்க வேண்டும். தொடர்ந்து, தூரத்தில் பொம்மை அல்லது ஏதேனும் பளீச்சென்ற கலரில் வாட்டர் பாட்டில்கள் போன்றவற்றை வைத்து குழந்தைகளை எடுக்க சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் தவள தொடங்கலாம்.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை