Diwali 2025: பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? இது மாசுபாட்டை ஏற்படுத்தாதா..?
Green Crackers: சுற்றுச்சூழலுக்கு குறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படும் இந்த பசுமை பட்டாசுகளில் அலுமினியம், பேரியம், பொட்டாசியம், நைட்ரேட் அல்லது கார்பன் போன்ற சாதாரண பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. சாதாரண பட்டாசுகளில் 160 டெசிபல் வரை சத்தத்தை எழுப்பும் அதே வேளையில், பசுமை பட்டாசுகள் 110 முதல் 125 டெசிபல் வரை மட்டுமே சத்த அளவை கொண்டுள்ளன.

பல மாநிலங்களில் தீபாவளி (Diwali) மற்றும் அடுத்த சில நாட்களில் காற்றின் தர குறியீடு குறைகிறது. இதனால், பெரும்பாலான நகரங்களில் புகைமூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. தீபாவளியின்போது காணப்படும் குறைந்த காற்றின் தர குறியீடு மற்றும் மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, கடந்த 2018ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உத்தரவிட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி எல்லா இடங்களிலும் மக்கள் பசுமை பட்டாசு (Green Crackers) விற்பனையை ஊக்குவிக்கிறார்கள். மற்ற வகை பட்டாசுகளை விட பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு குறைவான தீங்கு விளைவிப்பதாகவும், காற்று மாசுபாட்டை குறைப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு பச்சை பட்டாசுகள் என்றால் என்ன..? இது எதனால் தயாரிக்கப்படுகின்றன..? இது உண்மையில் மாசுபாட்டை ஏற்படுத்தாதா என்று முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க ஆசையா? வெடிக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!
பச்சை பட்டாசுகள் என்றால் என்ன..?
பசுமை பட்டாசு தயாரிக்கும் பணி CSIR- தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பசுமை பட்டாசுகளை உருவாக்க உதவும் ஒரு சூத்திரத்தை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்தது. சாதாரண பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரேட், பேரியம் நைட்ரேட் மற்றும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆகியவை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில், பசுமை பட்டாசுகளில் இந்த பொருட்கள் பயன்படுத்துவது கிடையாது. அப்படி இல்லையென்றால், குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் பசுமை பட்டாசுகள் சாதாரண பட்டாசுகளை விட குறைவான புகை மற்றும் சத்தத்தை உருவாக்குகின்றன.




பசுமை பட்டாசுகள் மாசுபாட்டை ஏற்படுத்தாதா..?
பசுமை பட்டாசுகளும் மாசுபாட்டை ஏற்படுத்தும். இருப்பினும். சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது, பசுமை பட்டாசுகள் 30 சதவீதம் குறைவான மாசுபாட்டையே ஏற்படுத்தும். இந்த பட்டாசுகள் வளிமண்டலத்தில் சிறிது அளவு புகை, சத்தம் மற்றும் தீங்கு விளைவிக்கும் கூறுகளையே வெளியிடுகின்றன. சில நேரங்களில் போலி பட்டாசுகள் கடைகளில் பசுமை பட்டாசுகளாகவும் விற்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளை அடையாளம் காண, CSIR-NEERI சான்றளித்த QR குறியீடு அல்லது பச்சை லோகோ வழங்கப்படுகிறது. பட்டாசு உண்மையில் பச்சை நிறமா இல்லையா என்பதை அறிய வாடிக்கையாளர்கள் இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
ALSO READ: பட்டாசு வெடிக்கிறீர்களா..? வெடிக்கும் முன் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சுற்றுச்சூழலுக்கு குறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படும் இந்த பசுமை பட்டாசுகளில் அலுமினியம், பேரியம், பொட்டாசியம், நைட்ரேட் அல்லது கார்பன் போன்ற சாதாரண பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. சாதாரண பட்டாசுகளில் 160 டெசிபல் வரை சத்தத்தை எழுப்பும் அதே வேளையில், பசுமை பட்டாசுகள் 110 முதல் 125 டெசிபல் வரை மட்டுமே சத்த அளவை கொண்டுள்ளன. எனவே, இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். அதேநேரத்தில், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பசுமை பட்டாசுகள் மாசுபாட்டை குறைப்பது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்றையும் சிறந்த ஆரோக்கியத்தையும் கொடுத்து செல்ல வேண்டும்.