Toothbrush: குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்க வேண்டும்..? பல் மருத்துவர் ஜனனி விளக்கம்!
Toothbrush Timeline for Children: ஒவ்வொரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் வாய்வழி வளர்ச்சியும், பற்களின் வளர்ச்சியும் (Teeth Care) வித்தியாசமானதாக இருக்கும். அதன்படி, உங்கள் குழந்தைகள் படிப்படியாக வளரும்போது எந்த பல் துலக்கும் பிரஷை பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

பல் மருத்துவர் ஜனனி
உங்கள் குழந்தைகள் வளர்ந்து 5 வயதுக்கு மேற்பட்ட சிறியவர்களாக மாறும் வரை எந்த அளவில் பல் துலக்கும் பிரஷை (Tooth Brush) பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். பலரும் இதை எதையும் அறியாமல் பெரியவர்கள் பயன்படுத்தும் அதே அளவிலான பல் துலக்கும் பிரஷை சிறியவர்களும் கொடுத்து பழக்கப்படுத்துகிறார்கள். இது தவறான வழிமுறையாகும். ஒவ்வொரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் வாய்வழி வளர்ச்சியும், பற்களின் வளர்ச்சியும் (Teeth Care) வித்தியாசமானதாக இருக்கும். அதன்படி, உங்கள் குழந்தைகள் படிப்படியாக வளரும்போது எந்த பல் துலக்கும் பிரஷை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அந்தவகையில், பிரபல பல் மருத்துவர் ஜனனி ஜெயபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.
ALSO READ: ஈறுகளில் இரத்தப்போக்கு பிரச்சனையா? இது எதனால் ஏற்படுகிறது..?
0 – 2 வயது வரை – 15 mm
0 முதல் 3 வயது வரையிலான தங்கள் குழந்தைக்கு பெற்றோர்கள் வாய்வழி ஆரோக்கியத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். 0- 2 வயது வரையிலான குழந்தைக்கு பல் துலக்கும் பிரஷின் அளவு 15 mm கொண்டதாக இருக்க வேண்டும். சிலிகானால் செய்யப்பட்ட இந்த குழந்தைகளுக்கு ஏற்ற பல் துலக்குதல் உங்கள் குழந்தையின் ஈறுகளில் படிந்திருக்கும் சர்க்கரை அல்லது பால் படிவுகளை அகற்ற ஒரு சிறந்த வழியாகும், மேலும் இதைப் பயன்படுத்துவது எளிது. இவர்களுக்கு பல் முளைக்கும் வரை நீங்கள் பற்பசையைப் பயன்படுத்தத் தேவையில்லை முதல் பல் முளைக்கும்போது , அரிசி அளவு பற்பசையைப் பயன்படுத்துவது நல்லது.
2 – 6 வயது – 19 mm
பெரிய குழந்தைகளுக்கு பல் துலக்கும் பிரஷ் வாங்க வேண்டிய நேரம் வரும்போது, அவை வேகமாக வளர்ந்து வருகின்றனர் என்று அர்த்தம்.இந்த பல் துலக்கும் பிரஷ்கள் பெரியவர்களின் அளவிலான பல் துலக்கும் பிரஷ்களைப் போலவே இருக்கும், ஆனால் சிறியதாக இருப்பதால் அவை சிறிய கைகளில் எளிதாகப் பொருந்தும். பல் துலக்குவதற்குப் பழகும் ஆரம்ப கட்டங்களில் இருக்கும்போது, மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்கும் பிரஷ்ஷைப் பயன்படுத்த வேண்டும். 19 mm கொண்ட மென்மையான முட்கள் ஈறுகளில் மென்மையாக இருக்கும், மேலும் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் வேலையைச் செய்கின்றன.
6 – 12 வயது – 22 mm
6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறியவர்களுக்கு பல் துலக்குதலின் பிரஷ்ஷின் அளவானது 22 mm இருக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு பல் துலக்குவதன் முக்கியத்துவத்தையும் சரியான நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அடிப்படைகளையும் சொல்லி தர வேண்டும். இது மட்டுமின்றி, இந்த வயது முதல் 6 முதல் 12 வயதுகுட்பட்ட சிறியவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதையும் பழக்கப்படுத்துவதும் முக்கியம்.
ALSO READ: அழுத்தி தேய்த்தால் பல் சுத்தமாகுமா? எச்சரிக்கும் மருத்துவர் ஜனனி ஜெயபால்!
10 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
சுமார் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான பிரஷை கொடுக்கலாம். மவுத்வாஷ் மற்றும் ஃவுளூரைடு கொண்ட பற்பசை ஆகியவற்றையும் தாராளமாக பழக்கப்படுத்தலாம்.